Pages

Monday, September 6, 2010

மனிதம்

நல்லவை வெறுப்போம்
அல்லவை வளர்ப்போம்
நன்னெறி புதைப்போம்
தீ நெறி கொள்வோம்
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்

முகத்தை மறைத்து
முகமூடிக்கொள்வோம்
அகத்தை மறைக்க
அழகாய் நடிப்போம்
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்

உள்ளமெல்லாம் கள்ளம் வைத்து
உறவுக்குள்ளே பொய்யைத் திணித்து
பழகும் மனிதர் பெருகும் யுகமிது
பண்பாய் வாழ்வது பெரும் பாடாயானது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்...

முகத்துக்கு நேராய் புகழ்கிறவர்
முதுகுக்குப் பின்னால் இகழ்கிறவர்
என்றேயான உலகமிது
என்றோ புதந்தது உண்மையது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்

புத்தன் யேசு காந்தி வழியில்
புத்தம் புதிதாய் பிறந்தேனென்று
சத்தம் போட்டுக் கூறி கொள்வார்
சதிகள் பலவும் செய்து கொள்(ல்)வார்
இதுதான் ம னிதம்
இனிமேல் புனிதம்

பொருளாய் பணமாய் கொடுத்தால்
உன்னை போற்றி மகிழும் உலகமிது
வெறும் புல்லாய் நீயும் இருந்தால்
உன்னை மிதித்து நகைக்கும் வையமிது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்

மனித நெறிகளெல்லாம்
வினோத வரிகளாக - என்
புரிதல் தப்பாய் போக
புத்தா நியும் பிறப்பாய்-என்
சித்தம் தெளிய வைப்பாய்!

புத்தம் சரணம் கச்சாமி........

No comments:

Post a Comment