
ஆடை கட்டி
அழகைக் காட்டி
ஆளை மயக்கத்
தெரியாது..
கொஞ்சிப் பேசி
கொஞ்சம் குலாவி
காரியமாற்றத் தெரியாது..
வீட்டிலொரு வேசமும்
வெளியிலொரு வேசமும்
போட்டு ஆடத்
தெரியாது....
ஆளுக்கேற்ப
ஆளைப் பார்த்து
வேலை செய்யத்
தெரியாது!
எல்லாம் படித்தவள்
நான் தான் என்று
சொல்லால் செயலால்
தலைகணம் காட்டத்
தெரியாது...
தெரியும் என்பதை
தெரியாதென்றும்
தெரியாதென்பதை
தெரியும் என்றும்
தாளம் போடத்
தெரியாது...
கொடுத்தப் பணியை
எடுத்துச் செய்யாமல்
அடுத்தவர் தலையில்
அடுக்கத் திணிக்கத்
தெரியாது....
பணியைச் செய்யாது
பல்லை இளித்து
வெள்ளை தோலைக்காட்டி
பட்டம் காட்டி
மிரட்டி ஏய்க்கத்
தெரியாது..
இது என் வேலையே
இல்லை என்று
தள்ளி நின்று
வேடிக்கை காட்டத்
தெரியாது..
கொண்ட கோபமெல்லாம்..
நெஞ்சில் வைத்து
போட்டுக் கொடுத்துப்
பெயர் வாங்கத் தெரியாது..
காரியமாற்றக் காலை பிடித்து
காரியம் முடிகையில்
வீரியம் காட்டத்
தெரியாது...
பண்பாய் பேசி
அன்பாய் இருப்பதாய்
அக்கறை உள்ளதாய்
அழகாய் காட்டி
ஆளை கெளக்கத்
தெரியாது...
வீடு வாகனமென்று
அடுத்தவர் வாழ்வதைப்
பார்த்து
வயிறெரியத் தெரியாது..
நெஞ்சில் உள்ளதை
வார்த்தையில் மறைத்து
அன்பைப் பேண
தெரியாது...
உள்ளதை உள்ளப்படி
பேசி செருப்படி
பட்டாலும் இது
திருந்தாது......!
No comments:
Post a Comment