நாயும் நரியும்
மனித உருவில்
உலவும் உலகமிது
உண்மை சொன்னால்
உன்னைக் கொல்லும்
கொடுமை தேசமிது
கடமை செய்தால்
மடமை என்று
பேசும் வீணர் கூட்டமுண்டு
காக்காய் பிடித்தால்
கடுக்காய் கொடுத்தால்
தாங்கும் பூமியிது...
குறைகள் கூறி
பொய்யை உரக்க பேசி
நடிக்கும் கூட்டமுண்டு
நிறைகள் கண்டால்
கேலி பேசி
கேவலப்படுத்தி
கெடுக்கும் உறவுமுண்டு
உள்ளம் எல்லாம்
கள்ளம் வைத்து
பழகும் நட்புகளே
உன் நெஞ்சை தொட்டு
கேட்டு பாரும் - அது
உண்மை சொல்லும் நீ
திருட்டு பையனென்று....
கண்ணால் பேசி
கதைகள் அளக்கும் -நம்
பின்னால் வந்தே
முதுகில் அறையும்
அடங்கி போனால்
அடக்கப் பார்க்கும்
திமிறி எழுந்தால்
திணறி ஓடும்.....
பொய்யாய், பொய்யாய்
மனிதரம்மா....
பேயாய் பேயாய்
குணங்களம்மா
மெய்யாய் மெய்யாய்
நினைக்கையிலே
மேனி கொதிக்குது
தீயாய் அம்மா......!
No comments:
Post a Comment