Pages

Monday, April 15, 2013

குளியல் இனிமை....

ஆற்று நீரை அள்ளி அள்ளி
குளித்த சுகம் கண்டதுண்டா?

ஊற்று நீரைக் கையில் அள்ளி
முகத்தில் அடித்த அனுபவம் கொண்டதுண்டா?

காலை நேரக் கிணற்று நீரின் வெதுவெதுப்பும்
மாலை பொழுதில் அந்த நீரின் சிலுசிலுப்பும்
வேளை தவறாமல் குளித்து அறிந்ததுண்டா?

உப்புக் கரிக்கும் கடல் நீரில்
உயிரைக் கரைத்து குளித்ததுண்டா?
நுரைத்து வரும் அலையோடு
அழைத்துக் காலை நனைத்ததுண்டா?

எத்தனை மரணம் நிகழ்ந்தாலும்
நித்தமும் பயமாய் இருந்தாலும்
சத்தமாய் வீழும் அருவியிலே
சுத்தமாய் குளித்த நினைவுண்டா?

வெயில் தரும் வெப்பம் உணர்ந்ததுமே
வேலையில் இருந்து வந்ததுமே
வியர்வை வாடை கண்டதுமே
விரைந்து சென்று குளித்ததுண்டா?

உச்சந் தலையில் நீர் விழுமே
உயிர் வரை சென்று கொன்றிடுமே
அந்தக் குளியல் அமைந்ததுண்டா?
இந்த சுகங்கள் உணர்ந்ததுண்டா?

குழாய் நீரை தலைக்கு மேலாய்

வீழா வீட்டு குளித்ததுண்டா?

வீழூம் நீரில் சத்தமின்றி

அழுது அழுது கரைந்ததுண்டா?

எத்தனை குளியல் கடந்தாலும்
உள்ளம் தூய்மை ஆகாது....
அழுது அழுது குளித்தப் பின்னே
அடங்கி போகும் உள் மனது................

No comments:

Post a Comment