Pages

Thursday, June 3, 2010

மாறி விடு...............

மனமாய் இருப்பதை
மனிதமாய் வைத்திருக்கிறேன்
புனிதமாய் வைத்திருக்கிறேன்
வினோதமாய் ஆக்கிவிட
மிருகமாய் ஆக்கிவிட
ஆயிரம் முயற்சிகள் ................

இதயமாய் இருப்பதை
இதமாய் வைத்திருக்கிறேன்
இனிதாய் வைத்திருக்கிறேன்
இரும்பாய் ஆக்கிவிட
இல்லாமல் ஆக்கிவிட
ஆயிரம் முயற்சிகள்.............

உள்ளமாய் இருப்பதை
உண்மையாய் வைத்திருக்கிறேன்
உள்ளதாய் வைத்திருக்கிறேன்
உருப்படியாய் வைத்திருக்கிறேன்
குப்பையாய் ஆக்கிவிட
குழப்பமாய் ஆக்கிவிட
ஆயிரம் முயற்சிகள்................

எண்ணமாய் இருப்பதை
வண்ணமாய் வைத்திருக்கிறேன்
திண்ணமாய் வைத்திருக்கிறேன்
திமிராய் ஆக்கிவிட
திவாலாய் ஆக்கிவிட
ஆயிரம் முயற்சிகள்..........

நல்லவனாய் வாழ்ந்திட
நாளும் தவிக்கிறேன்
நாயகனை வேண்டுகிறேன்
மழை நீராய் பொழிந்து
மண்ணில் கலந்து
சாக்கடையில் ஓடுகிறேன்..................

உலகம் எனக்கு
ஒளியை மறுத்து
இருளைக் காட்டுகிறது!
வழியை மறைந்து
குழியைக் காட்டுகிறது.........
நானும் வலியை மறந்து
வாழ்வைப் பார்க்கிறேன்
வாழப் பார்க்கிறேன்...........

தோல்வியாய் உள்ள வாழ்வை
வேள்வியாய் ஆக்கிக் கொள்கிறேன்.............................