காட்டிக் கொடுத்தக்
கதையும்
போட்டுக் கொடுத்தக்
கதையும்
நமக்குள்ளே நிறைய உண்டு.....
காட்டிக் கொடுக்கும் போதும்
போட்டுக் கொடுக்கும் போதும்
மனசாட்சி நம்மை சுட்டதுண்டு!
மனசாட்சி உள்ளவரைச் சுட்டதுண்டு!...
தெரியாமல் தான் கேட்கிறேன் - கொஞ்சம்
தெரிந்துதான் கேட்கிறேன்...
சொன்னதையும் சொல்லி
சொல்லாததையும் சொல்லி
இல்லாததையும் சொல்லி
பொல்லாததையும் சொல்லி
என்னதான் திருப்தியோ - இது
எப்போதும் மாறாத அதிருப்தியோ......
காட்டிக் கொடுத்த எட்டப்பன்
கதை என்னாச்சு....
போட்டுக் கொடுத்த பொல்லாதவன்
கதை மண்ணாச்சு...
மீண்டும் வாழ்வில் பழைய
நண்டு கதையே நிலைச்சாச்சு.....
ஒற்றுமையா நாமிருந்தா
பலருக்குத் திண்டாட்டம்
ஒட்டுமொத்தமாய் பிரிந்திருந்தா
வேலைக்காகாது பெருநஷ்டம்
ஊரிரண்டு பட்டால்
கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
இது தான் வாழ்க்கையானது
(இ)எப்போதும்...
பிரித்து வைப்பதும்
பின்பு சேர்த்து வைப்பதாய் நடிப்பதும்
அரசியலில் சாகசம்- இது
காலங்காலமாய்
ஆளுகின்ற கூட்டத்தின்
முகமூடி வேசம்.....