Pages

Sunday, May 23, 2010

பொய்யும் புரட்டும்
நாயும் நரியும்
மனித வடிவாய் ஆனது

மெய்யும் பண்பும் ...
அன்பும் கருணையும்
பாழுங் கிணற்றில் வீழ்ந்தது

படித்தப் படிப்பும்
பெற்ற பட்டமும்
தலைகணம் மட்டும் தந்தது.

உண்மையும் நன்மையும்
நானிலம் தன்னில்
நலிந்து நலிந்து போனது.

நல்லவரெல்லாம் - மனம்
உள்ளவரெல்லாம்
வெம்பி வெறுத்து சாகுது

அல்லவரெல்லாம் - பணம்
கொண்டவரெல்லாம்
எம்பி குதித்து ஆடுது!
அகத்தைப் படிக்க முடியாமல்
முகத்தைப் பார்த்து தவிக்கின்றேன்
நல்லது கெட்டது தெரியாமல்
நம்பிக்கை இழந்து துடிக்கின்றேன்
நட்பும் பகையும் அறியும் அறிவை யாசிக்கின்றேன்
அன்போ வன்போ பேசி பல மனதை ஏனோ வஞ்சிக்கிறேன்!
புத்தம் புதிதாய் நித்தம் வருவாள்
சத்தமின்றி சலனம் செய்வாள்
கத்தும் கடலின்...அலைகள் அவள்
சுற்றும் பூமியின் சூரியனும் அவள்
தத்தும் குழந்தையின் கண்களில் நின்று
பத்தும் பேசி பித்தாய் செய்வாள்!
சொத்தாய் இருக்கும்மொத்தமும் அவள்
வித்தகம் பயின்ற புத்தகம் அவள்!
பொய் பேசி போகும் உறவாக வேண்டாம்
மெய் பேசி வளரும் உறவாக வேண்டும்
கை வீசி போக உறவேதும் வேண்டாம்
கையோடு கைகோர்த்து துணையாக வேண்டும்!

வென்று குவிக்க தெம்பு உண்டு
நன்று செய்யும் மனங்கள் உண்டு
இன்றே தொடங்க நேரமில்லை!
என்றே பேசும் இளையர் கண்டு
நின்றே துடிக்கும் இதயம் சோர்ந்து!


முயற்சி காட்டும் முகம் கண்டு
அயர்ச்சி கொள்ளலாகாது!
வீழ்ச்சி கூட கற்கண்டு
ஆக்க வேண்டும் வழித்தேடு!

வாழ்க்கை ரொம்ப போராட்டம்
வாழ வேண்டும் அம்பாட்டம்
தோல்வி வரும் துயர் காட்டும்
துவழ வேண்டாம் துணியாட்டம்
துணையாக வருவதெல்லாம் பேயாட்டம்
ஒரு பொழுதில் மாறிவிடும் குரங்காட்டம்
பாறை ஒன்று இருக்கவேண்டும் மனமாட்டம்
பலகோடி இன்னல்களும் போகும் தூசியாட்டும்.

நன்று நினைத்து நன்மை செய்தால்
நமக்கே நலமாகும்!
வென்று குவிக்க நாள்கள எல்லாம்
இன்றே மலராகும்!
பொல்லாத கனவுகள்
வெல்லாத போது
சொல்லாத சுகமுண்டு நெஞ்சோரம்
வெல்லாத கனவுகள் நில்லாத போது
கொள்ளாத ஆசை தினந்தோறும்!
வீழாத மனத்தோடு
வீழ்ந்தாலும் போராடு!
துள்ளாத இளமை துணையாகட்டும்
தள்ளாத வயதில் நினைவாகட்டும் –
இனிய நினைவாகட்டும்.
கதவைத் திறந்து பாராத வரை
உள்ளே இருப்பது தெரியாது
மனதைத் திறந்து பேசாத வரை
வார்த்தைப் பயனைத் தாராது
முயற்சி செய்து தோல்வி பெறாத வரை
வாழ்க்கை நமக்குப் புரியாது
வலிகள் கண்டு அழும் வரை
வழிகள் நம்மை அறியாது!
தீர்மானிக்கவியலாத தீர்மானங்கள்
தினம் தினம் வாழ்வில்
திருப்பி பெறவே முடியாத காலங்கள்
முடிவில் தீராத ஆசைகளின் பிடியில்
தொலைந்து மாறத வடுக்களை நெஞ்சில் சுமந்து
முற்றுப் பெறாத பயணத்தில் மீண்டும் நுழைந்து
கற்று கொள்கிறேன் வாழ்க்கையை முயன்று.