Pages

Sunday, April 11, 2010

நிம்மதி

பசுமையான விருட்சம்
ஒடி போன வருசம்
நினைத்துப் பார்க்கும் மனம்
கொஞ்சம் நிழல்
ஒரு நாற்காலி
சில புத்தகங்கள்
ஒரு மலைசாரல்
இரவும் இல்லாமல்
பகலும் இல்லாமல்
ஒரு பொழுது

முதுமையைக் காட்டும் முகம்
கண்ணை கடந்த காட்சிகள்
என்னை கடந்த நாள்கள்
நாள்களைக் கடந்த நான்

நரைத்து போன முடி
முடிந்து போன வாழ்க்கை
கண்ணாடி வழி விழி
பக்கத்தில் ஒரு கைத்தடி
பக்கத்து நாற்காலியில் மரணம்
கைகுலுக்கி குசலம் விசாரிக்கிறது........

இருந்தாலும்,

வாழ்ந்து விட்ட
நிமிசங்களின்
எச்சமாய்
மிச்சம் உள்ளதை
சுவைத்துப் பார்த்து
நகைக்கிறேன்.

நாளை என்னுடையதோ
எமனுடையதோ அறியேன்
பராபரமே!