தங்கச்சி.... தங்கச்சி
எது தான் உன் கட்சி?
உன் புருஷன் ஒரு பேமாளி
அவனைப் பெத்தவளோ சோமாளி
அவன் பக்கம் பேசுகிற கூட்டமோ பெருச்சாளி
உன்னை பெத்தவளோ ஏமாளி
கூட பொறந்த பொறப்பு நாங்களெல்லாம் கோமாளி.............
கொண்டவனைனக் கோட்டை விட்டு வந்தவளே.....
பெத்தவளையும் வயிறெரிய விட்டு நின்றவளே........
உடன் பிறந்த என்னோடும் பகையாகி போனவளே.......
தங்கச்சி தங்கச்சி
எது தான் உன் கட்சி?
நாயமெல்லாம் உன் பக்கம் தான் இருக்க..?
அநியாயமெல்லாம் உன் பக்கம் தான் இருக்கா?
அதை பற்றி பேசினா வெறுப்பா?
எதை பற்றி தான் நீ கவலை படுவாய் பொறுப்பா?
கட்டினவன் மேல உனக்குச் சந்தேகமா?
எட்டி அவனை உதைத்து விட்டால் அது தீருமா?
சட்டி பானை போல ஒரு வாழ்க்கை போதுமா?-வெறும்
கட்டிடமா நீ இருந்தா மனசு ஆறுமா?
ஏசி விட்டால் பேசி விட்டால் பகையாகுமா?
உடன் பிறந்த நேசமெல்லாம் பொய்யாகுமா?
உன் சோகம்
என் மனதைக் குத்துகிறதே
நெருப்பு பட்ட புண்ணாக பற்றுகிறதே!
உன் நலம் வேண்டும்
அனைவரிடமும் பகை வேண்டுமா?
உன் மெளனத்தை உடைக்க
ஒரு வழி கூறம்மா?
சித்தமெல்லாம் உன் மேல் நிறுத்தி
நித்தம் நித்தம் வேண்ட ஒரு தாயுண்டு...
சொந்தமென்ன பந்தமென்ன என்று வெறுத்தாலும்- உன்
சோகம் கண்டு நோக பல மனமுண்டு....
ஆத்திரத்தில் பேசி விட்ட வார்த்தையை விடு
அன்பு கொண்டு பேச வந்தால் வாய்ப்புக் கொடு
அழகாக சிரித்து கொஞ்சம் பேசி விடு...
அடிக்கிற கரம் தான் அணைக்குமென்று
படித்தெல்லாம் மறந்தாச்சா?
இடி இடிப்பது போல பேசி - உன்னை
நினைக்கிற மனச புதைத்தாச்சா?
தாய் வீடே கதியென்று வந்த பின்னே- உன்
தலைகணத்தை விட்டு விடு சின்ன பெண்ணே.
சொல்வதற்கு ஆயிரனம் தான் வார்த்தையுண்டு - நீ
கேட்டுக் கொண்டால் வாழ்க்கையில் நன்மையுண்டு....
உன் 'ஈகோவைத்' தூக்கி
அந்தக் குப்பையில் போடு
உன் பிடிவாதத்தை பிடி தளர்த்தி
வாழ்க்கையைப் பாரு.....
சுகம் எல்லாம் ஒதுக்கி ஒதுக்கி
அகம் செதுக்கினாய்-சிலர்
முகம் கூட பாராமல்
உன்னை சுருக்கினாய்!
நத்தை போல ஓட்டுக்குள்ளே நீ ஒடுங்கினாய்-உன்
குற்றத்தை ஒப்புக்கொள்ள நீ தயங்கினாய்....
குறைகளை உணர்ந்துகொள்ளும் புத்தியில்லையா-அதை
நிறைவாக்கி திருத்திக் கொள்ள சத்தியில்லையா?
பிழையே செய்யாத பெண்னென்று -உன்
மேலே உனக்கொரு இறுமாப்புண்டு......
உன் தேவையெல்லாம் அறிவதற்கு
கடவுள் இல்லையே?
உனக்கு மனமிரங்கி சேவை செய்யும்
தாயை விட வேறு கதியில்லையே......
அந்த தாயை நீயும் நோக வைத்தால் வழி பிறக்குமா?
எந்த ஜென்மத்திலும் தீர்க்கவிய்லாத பழி வேண்டுமா?
கடலில் போட்ட பொருளெல்லாம் கரை வந்து சேரும்
கால்யாணத்தில் போட்ட உனது வாழ்க்கை சிக்கல் எப்பத்தான் தீரும்?
நெஞ்சில் உள்ள வார்த்தையெல்லாம் கொட்டிவிட்டேன்
இது உன் மனதை மாற்ற வேண்டுமென்று நானும் வேண்டிக்கொண்டேன்...
Wednesday, December 22, 2010
Monday, December 13, 2010
மனம்
வயல் வெளியின்
மேற்பரப்பில்
ஒரு பறவையாய்
சிறகடிக்கிறது
மனம்.......
விண்வெளி எங்கும்
வெண்சிறு மேகமாய்
நகர்கிறது
மனம்...
மலைத் தொடர்
தோறும்
நதியாய்
ஊர்கிறது
மனம்........
வானந்திரமெங்கும்
ஒரு வானரமாய்
தாவி
குதிக்கிறது
மனம்.........
புகை மூட்டமாய்
முகம் காட்டும்
மேகங்களில்
நீர்த்துளியாய்
கரைந்து
போகிறது
மனம்..........
கடல் நீரின்
மேற்பரப்பில்
ஆதவனின்
ஒளிகரங்கள்
போட்ட கோலங்களில்
காணமல்
போகிறது
மனம்..........
நீண்டு போன
பயணத்தில்
நயனம்
கண்டு கொண்ட
அழகையெல்லாம்
துண்டு துண்டாய்
எழுதி வைத்து
ரசிக்கிறது
மனம்........
மேற்பரப்பில்
ஒரு பறவையாய்
சிறகடிக்கிறது
மனம்.......
விண்வெளி எங்கும்
வெண்சிறு மேகமாய்
நகர்கிறது
மனம்...
மலைத் தொடர்
தோறும்
நதியாய்
ஊர்கிறது
மனம்........
வானந்திரமெங்கும்
ஒரு வானரமாய்
தாவி
குதிக்கிறது
மனம்.........
புகை மூட்டமாய்
முகம் காட்டும்
மேகங்களில்
நீர்த்துளியாய்
கரைந்து
போகிறது
மனம்..........
கடல் நீரின்
மேற்பரப்பில்
ஆதவனின்
ஒளிகரங்கள்
போட்ட கோலங்களில்
காணமல்
போகிறது
மனம்..........
நீண்டு போன
பயணத்தில்
நயனம்
கண்டு கொண்ட
அழகையெல்லாம்
துண்டு துண்டாய்
எழுதி வைத்து
ரசிக்கிறது
மனம்........
Tuesday, November 16, 2010
அகங்காரம் + அடங்காபிடாரித்தனம்
நெஞ்சழுத்தம் உள்ளவர்களின்
உலகமிது
நெஞ்சார வாழ்பவருக்கு - வெறும்
உருண்டையிது....
அஞ்சாமல் அடாவடிகள்
அரங்கேறும்
அதை கேட்டால்
நெஞ்சார பொய் சொல்லும் - ஒரு
கூட்டம்......
ஏன் என்று கேட்பதற்கும்
தவறு என்று உரைப்பதற்கும்
தடுமாற்றம்........
தப்பி தவறி கேட்டு விட்டாலோ
இடமாற்றம்............
நல்லவனுக்கு நாலு பேர்
என்பதெல்லாம் பொய்யாச்சு
என்றும்
நயவஞ்சகருக்கு
நாற்பது பேர் உறவாச்சு......
கத்தி கத்தி பேசி விட்டு
குத்தி பிறரை நோக விட்டால்
பொய்யும் கூட புது(மை)
மெய்யாகும்.......
அடக்கமில்லா பேச்சும்
ஆணவம் காட்டும் நடையும்
அகங்காரமும் - அதை
அணைத்துக் கொள்ளு(ல்லு)ம்
நிர்வாகமும் ....................
தெய்வம் வலியது என்றனர்
தெய்வம் கொடியது ஆனதிங்கு
நீதி நேர்மை ஞாயமெல்லாம்
வீதியோரத்து சொரி நாயாய்
ஆதரவின்றி திரியிதிங்கு..........
உலகமிது
நெஞ்சார வாழ்பவருக்கு - வெறும்
உருண்டையிது....
அஞ்சாமல் அடாவடிகள்
அரங்கேறும்
அதை கேட்டால்
நெஞ்சார பொய் சொல்லும் - ஒரு
கூட்டம்......
ஏன் என்று கேட்பதற்கும்
தவறு என்று உரைப்பதற்கும்
தடுமாற்றம்........
தப்பி தவறி கேட்டு விட்டாலோ
இடமாற்றம்............
நல்லவனுக்கு நாலு பேர்
என்பதெல்லாம் பொய்யாச்சு
என்றும்
நயவஞ்சகருக்கு
நாற்பது பேர் உறவாச்சு......
கத்தி கத்தி பேசி விட்டு
குத்தி பிறரை நோக விட்டால்
பொய்யும் கூட புது(மை)
மெய்யாகும்.......
அடக்கமில்லா பேச்சும்
ஆணவம் காட்டும் நடையும்
அகங்காரமும் - அதை
அணைத்துக் கொள்ளு(ல்லு)ம்
நிர்வாகமும் ....................
தெய்வம் வலியது என்றனர்
தெய்வம் கொடியது ஆனதிங்கு
நீதி நேர்மை ஞாயமெல்லாம்
வீதியோரத்து சொரி நாயாய்
ஆதரவின்றி திரியிதிங்கு..........
Thursday, October 28, 2010
அடையாலங்கள் அங்கிகாரங்கள்
என்னுடையதென ஓர் அடையாலம்
அது எது?
எனக்கென ஓர் அங்கிகாரம்
அது என்ன?
அடையாலம் வேண்டும் என்று
அலையவில்லை
அங்கிகாரம் வேண்டும் என்று
ஆணவமில்லை........
கடமைக்குக் கூலி
கேட்கவில்லை
கூலிக்கு கடமை
ஆற்றவில்லை
உண்மைக்குப் புறம்பாய்
நடக்கவில்லை
பொய்யையே முதலாய்
கொள்ளவில்லை
புறம் பேசி பிறர் வாழ்வைக்
கெடுக்கவில்லை
அறம் பேசி அரிசந்திரனாய்
நடிக்கவில்லை
துதி பாடி யாரையும்
மயக்கவில்லை
சதி செய்து யாரையும்
கெளக்கவில்லை
பிழை செய்து சரியென்று
சாதிக்கவில்லை
நிலை கெட்டு மனமென்றும்
பாதிக்கவில்லை
என் அடையாலம்
தான் என்ன
அதை தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்
புத்தன் வாயில் எச்சிலாய்
காந்தி வீட்டின் சொரி நாயாய்
கம்பன் வீட்டு கழிவாய்
காமராஜரின் நகங்களின் அழுக்காய்
அன்னை தெரெசாவின் எச்சமாய்
என்று உலகில் உள்ள
நல்லவர்களின் மிச்சமாய்
ஓர் அடையாலம் வேண்டும்......
அது எது?
எனக்கென ஓர் அங்கிகாரம்
அது என்ன?
அடையாலம் வேண்டும் என்று
அலையவில்லை
அங்கிகாரம் வேண்டும் என்று
ஆணவமில்லை........
கடமைக்குக் கூலி
கேட்கவில்லை
கூலிக்கு கடமை
ஆற்றவில்லை
உண்மைக்குப் புறம்பாய்
நடக்கவில்லை
பொய்யையே முதலாய்
கொள்ளவில்லை
புறம் பேசி பிறர் வாழ்வைக்
கெடுக்கவில்லை
அறம் பேசி அரிசந்திரனாய்
நடிக்கவில்லை
துதி பாடி யாரையும்
மயக்கவில்லை
சதி செய்து யாரையும்
கெளக்கவில்லை
பிழை செய்து சரியென்று
சாதிக்கவில்லை
நிலை கெட்டு மனமென்றும்
பாதிக்கவில்லை
என் அடையாலம்
தான் என்ன
அதை தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்
புத்தன் வாயில் எச்சிலாய்
காந்தி வீட்டின் சொரி நாயாய்
கம்பன் வீட்டு கழிவாய்
காமராஜரின் நகங்களின் அழுக்காய்
அன்னை தெரெசாவின் எச்சமாய்
என்று உலகில் உள்ள
நல்லவர்களின் மிச்சமாய்
ஓர் அடையாலம் வேண்டும்......
Tuesday, October 19, 2010
தமிழ்ப் பள்ளி
வேலையே செய்யாது- எந்த
சேவையும் ஆற்றாது
தேவை ஏற்பட்டால்
காலையும் வாரிவிடும்
தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் - பல
தெய்வம் இதை போற்றும்.....
ஊமையாய் பல வேசம்
உண்மையேயில்லாத நேசம்
உருவாக்கப் பணியில்
ஊனப்பட்ட பிணிகள்...
தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் - பல
தெய்வம் இதை போற்றும்.....
வேலை கொடுத்தால் பல குறைகள்
வெட்டி முறித்ததாய் தினம் உரைகள்
தலைவனை மயக்கும் சாகசங்கள்
தலைவிரி கோலமாய் சில முகங்கள்.....
பணியைச் செய்பவருக்கே பணியென
பணித்திடும் தலைவனிடத்தில் ஒரு கேள்வி
சுமையைச் சுமப்பவரே சுமைதாங்கியானால்
சோம்பேறிக்குச் சம்பளம் கொடுப்பதேன்????????????????

கம்பன் விழா
கம்பன் விழா கண்டெடுத்த தங்கமே
தமிழ் தலைவர்களில் நீரென்றும் சிங்கமே
தலைமுறைக்குத் தமிழ் என்ற முழக்கமே - உன்
கனவெல்லாம் நிஜமாகும் சீக்கிரமே.
எண்ண மாட்டா மக்கள் கூட்ட வெள்ளமே
எண்ண எண்ண கம்பன் தமிழ் இனிக்குமே
எண்ண வேண்டுமிதை என்று எண்ணித்தான் - உன்
எண்ணம் கொண்ட ஆசை வெற்றிதான்
உண்ண உணவும் உறங்க இடமும்
இன்னும் பிறவும் செய்த நன்றியே
உனக்கு சொல்ல இல்லை வார்த்தையே-இங்கு
உன்னை வாழ்த்தும் வயதெனக்கில்லையே
தமிழுக்காக உழைப்பவரை எங்காணிணும் வணங்குகிறேன்
தமிழ் செய்யும் தமிழே உன் தாழ் பணிக்கிறேன்
தமிழின்னும் நீ செய்ய கரம் கூப்பி யாசிக்கிறேன்
தமிழாய் நீடுழி வாழ தமிழை வேண்டுகிறேன்...

Sunday, September 19, 2010
கேள்விகள்
உணர்வு தெளிந்த
நாள் முதலாய்
ஆயிரமாயிரம் கேள்விகளாய்
ஆழ்மனதில்
குளத்தில் விழுந்த
கல்லாய் அதிர்வுகளை
அலைகளை எழுப்பி
விடை கண்டும் காணமலும்
அதுவாய்
அடக்கமாகி விடுகிறது.........
கேட்க நினைத்த கேள்விகளும்
கேள்வியாய் நிலைத்த கேள்விகளும்
கேட்காமல் விட்ட கேள்விகளும்
விடையே இல்லா வினாகளும்
வெறுப்பை கொட்டிய கேள்விகளும்
அருவருப்பைக் காட்டும் கேள்விகளும்
அதிகார வர்க்கக் கேள்விகளும்
அவமானப் படுத்தும் கேள்விகளும்
கோபம் தொனிக்கும் கேள்விகளும்
கேள்வி குறிகள் மண்டைகுள்
முள்ளாய் முளைத்து
குத்தியதே
கேட்க நினைக்கும் தருணங்களில்
அவை மொழியை இழந்து தவிக்கிறதே......
கேட்க வேண்டிய நேரம் விட்டு
மனமெங்கும் சதா ரணம் படுத்தும்
சாதாரண கேள்விகள்...........
வினாகள் மட்டும் நிலைத்து விட
விடைகள் எங்கோ தொலைந்து விட
வாழ்க்கை மட்டும் கேள்வியாய்............
எஞ்சி நின்று நகைகிறதே....
நாள் முதலாய்
ஆயிரமாயிரம் கேள்விகளாய்
ஆழ்மனதில்
குளத்தில் விழுந்த
கல்லாய் அதிர்வுகளை
அலைகளை எழுப்பி
விடை கண்டும் காணமலும்
அதுவாய்
அடக்கமாகி விடுகிறது.........
கேட்க நினைத்த கேள்விகளும்
கேள்வியாய் நிலைத்த கேள்விகளும்
கேட்காமல் விட்ட கேள்விகளும்
விடையே இல்லா வினாகளும்
வெறுப்பை கொட்டிய கேள்விகளும்
அருவருப்பைக் காட்டும் கேள்விகளும்
அதிகார வர்க்கக் கேள்விகளும்
அவமானப் படுத்தும் கேள்விகளும்
கோபம் தொனிக்கும் கேள்விகளும்
கேள்வி குறிகள் மண்டைகுள்
முள்ளாய் முளைத்து
குத்தியதே
கேட்க நினைக்கும் தருணங்களில்
அவை மொழியை இழந்து தவிக்கிறதே......
கேட்க வேண்டிய நேரம் விட்டு
மனமெங்கும் சதா ரணம் படுத்தும்
சாதாரண கேள்விகள்...........
வினாகள் மட்டும் நிலைத்து விட
விடைகள் எங்கோ தொலைந்து விட
வாழ்க்கை மட்டும் கேள்வியாய்............
எஞ்சி நின்று நகைகிறதே....
Sunday, September 12, 2010
குப்பை மேட்டை விடவா?
பத்து திங்கள்
சுமக்கவில்லை...
பத்தியங்கள்
இருக்கவில்லை.....
'மோர்னிங் சீக்'
கொண்டதில்லை....
மசக்கை எதுவும்
அனுபவித்ததில்லை......
மலடி என்று பலர்
கூடி பல முறை
இடித்துரைத்தும்
முடியாத போராய்
மடியாத உயிரை
பிடித்துக்கொண்டு
நடித்துக் கொண்டிருக்கிறேன்....
ஒரு தாயாக
தயாராக.....
என் கர்ப்பபை
ஒரு குப்பைபையா?
மன்னிக்கவும்
அந்த குப்பையின் மடியில்
கூட பல சமயம்
குழந்தைகள் அவதனிக்கிறது....
என் கருவறை
கல்லறையா?
சுமக்கவில்லை...
பத்தியங்கள்
இருக்கவில்லை.....
'மோர்னிங் சீக்'
கொண்டதில்லை....
மசக்கை எதுவும்
அனுபவித்ததில்லை......
மலடி என்று பலர்
கூடி பல முறை
இடித்துரைத்தும்
முடியாத போராய்
மடியாத உயிரை
பிடித்துக்கொண்டு
நடித்துக் கொண்டிருக்கிறேன்....
ஒரு தாயாக
தயாராக.....
என் கர்ப்பபை
ஒரு குப்பைபையா?
மன்னிக்கவும்
அந்த குப்பையின் மடியில்
கூட பல சமயம்
குழந்தைகள் அவதனிக்கிறது....
என் கருவறை
கல்லறையா?
Saturday, September 11, 2010
அவமான தருணங்கள்
என்றோ எப்போதோ
எப்படியோ நிகழ்தது
ஏனோ அடிக்கடி
தோன்றி தொணதொணக்கிறது....
அன்றே அப்போதே
மறந்ததாக இறந்ததாக
எண்ணிய நொடிகளின்
நெடிகள்
இன்றும் இப்போதும்
மூக்குத் தூவரங்களை
துளைக்கிறது.............
இறந்த அந்த நிமிடம்
அவ்வப்போது
உயிர்ப்பித்து எழுந்து
உயிரை உலுக்குகிறது.....
அன்று பட்ட
அவமானதை விட
அசிங்கதை விட
இன்றும் நினைவை
அழுக்காக்கி அழுகிறது மனம்....
அந்த அவமான தருணங்கள்
தருகின்ற சன்மானம்
விலைக்குப் போனது
என் தன்மானம்....
யாருக்கும் தெரியாது
ஊருக்கும் தெரியாது
ஒருவனைத் தவிர
அந்த ஒருவனும்
அறியாமல்
அடிக்கடி வந்து
அச்சுறுத்துகிறது
அந்த அணையாத
அவமான தருணங்கள்.......
எப்படியோ நிகழ்தது
ஏனோ அடிக்கடி
தோன்றி தொணதொணக்கிறது....
அன்றே அப்போதே
மறந்ததாக இறந்ததாக
எண்ணிய நொடிகளின்
நெடிகள்
இன்றும் இப்போதும்
மூக்குத் தூவரங்களை
துளைக்கிறது.............
இறந்த அந்த நிமிடம்
அவ்வப்போது
உயிர்ப்பித்து எழுந்து
உயிரை உலுக்குகிறது.....
அன்று பட்ட
அவமானதை விட
அசிங்கதை விட
இன்றும் நினைவை
அழுக்காக்கி அழுகிறது மனம்....
அந்த அவமான தருணங்கள்
தருகின்ற சன்மானம்
விலைக்குப் போனது
என் தன்மானம்....
யாருக்கும் தெரியாது
ஊருக்கும் தெரியாது
ஒருவனைத் தவிர
அந்த ஒருவனும்
அறியாமல்
அடிக்கடி வந்து
அச்சுறுத்துகிறது
அந்த அணையாத
அவமான தருணங்கள்.......
குற்றமும் சுற்றமும்

குற்றம் செய்த போது தானே
சுற்றம் வந்தது - என்
குற்றம் எல்லாம்
இடித்துரைத்து
பட்டம் தந்தது
ஓடிப்போனவள் என்று
பட்டம் தந்தது
எண்ணமெல்லாம் வார்த்தையாகி
நெஞ்சில் நின்றது - இந்த
சொந்தமெல்லாம்
பந்தம் கொள்ள
உறவு வந்தது -நல்
வரவு சொன்னது
வாழ்ந்து விட்டால்
வீழ்ந்து போக உறவுகள்
சூழ்ந்து கொள்ளுமே
சூழ்ச்சி செய்து சூது பல
சொல்லி மகிழுமே - எம்மை
எள்ளி மகிழுமே
திருந்தி வந்தேன்
திரும்பி வந்தேன் - தினம்
வரிந்தி அழுதேன்
உறுதி எல்லாம்
சிதறி போக
பயணம் போகிறேன் - இறுதிப்
பயணம் போகிறேன்.
உளறல்கள்
புல்வெளி எங்கும் - என்
மனவெளி
ஒரு பட்டாம் பூச்சியாய்
படபடக்கிறது...........
அலைகளில்
ஆடும் சிறு
படகாய்
ஆடி ஆடி
தத்தளிக்கிறது
அடிக்குப் பயந்தழுவும்
சிறு குழந்தையாய்
மனம்
அடிக்கடி
துடித்துடிக்கிறது
புரிந்ததும்
புரியாததுமாய்
விளங்கியதும்
விளங்காததுமாய்
எதையோ புரிந்து கொள்ளவும்
எதையோ விளங்கிக்கொள்ளத்
துடிக்கவும் மனம் படாதபாடு படுகிறது....
மனவெளி
ஒரு பட்டாம் பூச்சியாய்
படபடக்கிறது...........
அலைகளில்
ஆடும் சிறு
படகாய்
ஆடி ஆடி
தத்தளிக்கிறது
அடிக்குப் பயந்தழுவும்
சிறு குழந்தையாய்
மனம்
அடிக்கடி
துடித்துடிக்கிறது
புரிந்ததும்
புரியாததுமாய்
விளங்கியதும்
விளங்காததுமாய்
எதையோ புரிந்து கொள்ளவும்
எதையோ விளங்கிக்கொள்ளத்
துடிக்கவும் மனம் படாதபாடு படுகிறது....
Monday, September 6, 2010
மனிதம்
நல்லவை வெறுப்போம்
அல்லவை வளர்ப்போம்
நன்னெறி புதைப்போம்
தீ நெறி கொள்வோம்
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
முகத்தை மறைத்து
முகமூடிக்கொள்வோம்
அகத்தை மறைக்க
அழகாய் நடிப்போம்
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
உள்ளமெல்லாம் கள்ளம் வைத்து
உறவுக்குள்ளே பொய்யைத் திணித்து
பழகும் மனிதர் பெருகும் யுகமிது
பண்பாய் வாழ்வது பெரும் பாடாயானது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்...
முகத்துக்கு நேராய் புகழ்கிறவர்
முதுகுக்குப் பின்னால் இகழ்கிறவர்
என்றேயான உலகமிது
என்றோ புதந்தது உண்மையது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
புத்தன் யேசு காந்தி வழியில்
புத்தம் புதிதாய் பிறந்தேனென்று
சத்தம் போட்டுக் கூறி கொள்வார்
சதிகள் பலவும் செய்து கொள்(ல்)வார்
இதுதான் ம னிதம்
இனிமேல் புனிதம்
பொருளாய் பணமாய் கொடுத்தால்
உன்னை போற்றி மகிழும் உலகமிது
வெறும் புல்லாய் நீயும் இருந்தால்
உன்னை மிதித்து நகைக்கும் வையமிது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
மனித நெறிகளெல்லாம்
வினோத வரிகளாக - என்
புரிதல் தப்பாய் போக
புத்தா நியும் பிறப்பாய்-என்
சித்தம் தெளிய வைப்பாய்!
புத்தம் சரணம் கச்சாமி........
அல்லவை வளர்ப்போம்
நன்னெறி புதைப்போம்
தீ நெறி கொள்வோம்
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
முகத்தை மறைத்து
முகமூடிக்கொள்வோம்
அகத்தை மறைக்க
அழகாய் நடிப்போம்
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
உள்ளமெல்லாம் கள்ளம் வைத்து
உறவுக்குள்ளே பொய்யைத் திணித்து
பழகும் மனிதர் பெருகும் யுகமிது
பண்பாய் வாழ்வது பெரும் பாடாயானது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்...
முகத்துக்கு நேராய் புகழ்கிறவர்
முதுகுக்குப் பின்னால் இகழ்கிறவர்
என்றேயான உலகமிது
என்றோ புதந்தது உண்மையது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
புத்தன் யேசு காந்தி வழியில்
புத்தம் புதிதாய் பிறந்தேனென்று
சத்தம் போட்டுக் கூறி கொள்வார்
சதிகள் பலவும் செய்து கொள்(ல்)வார்
இதுதான் ம னிதம்
இனிமேல் புனிதம்
பொருளாய் பணமாய் கொடுத்தால்
உன்னை போற்றி மகிழும் உலகமிது
வெறும் புல்லாய் நீயும் இருந்தால்
உன்னை மிதித்து நகைக்கும் வையமிது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
மனித நெறிகளெல்லாம்
வினோத வரிகளாக - என்
புரிதல் தப்பாய் போக
புத்தா நியும் பிறப்பாய்-என்
சித்தம் தெளிய வைப்பாய்!
புத்தம் சரணம் கச்சாமி........
Thursday, September 2, 2010
உயிராய் வா
கல்லாய் தானே நீ இருந்தாய்
சொல்லால் மட்டும் தான் நிறைந்தாய்
சிலையாய் தானே நீ இருந்தாய்
இறையாய் உயிராய்சென்று வருவாய் இறைவா?
தொழுதால் தருவாய் வாழ்வென்று
அழுதேன் நாளும் உனை தொழுது
பழுதாய் போன விழியிரண்டு
விழுந்தால் எழுவேன் தினம் முயன்று...
இதயம் வலிக்கும் ஒரு பொழுதும்
இன்னல் தொடரும் பல பொழுதும்
சிக்கல் தந்தாய் எப்பொழுதும்
இரக்கம் இல்லை இப்பொழுதும்.....
பிழைகள் கண்ட பல பொழுதும்
சதிகள் கண்ட சில பொழுதும்
நெஞ்சை பிளக்கும் சினம் கொண்டும்
நஞ்சாய் மாறி வாழ்ந்ததுண்டு
கொடுமை வடிவாய் மனிதர்களை
படைத்ததென்ன பூமியிலே
அடிமை கொண்ட இறைவனிடம்
உடைத்துச் சொன்னேன் உண்மைகளை!...
விடியல் தேடும் விழியிரண்டும்
விழியில் ஓடும் நீ புரண்டு
புவியைக் காக்கத் தெய்வமுண்டு
புலியாய் போன மனிதனைத் தாக்க யாருண்டு?
நின்று கொள்ளும் தெய்வமெங்கே?
அன்றே கொல்லலாகாதா?
நன்று செய்த மனங்களை மட்டும்
கொன்று தீர்த்தல் தான் தகுமா?
வஞ்சம் கொண்ட நெஞ்சங்களில்
வாழ சென்று விட்டனையோ?
கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையையும்
பாழாய் போக விட்டனையோ...?
கல்லாய் தானே நீ இருந்தாய்
சொல்லாய் மட்டும் வாழ்கின்றாய்
தீயாய் போன உள்ளங்களில்
இறையாய் உயிராய் என்று வருவாய் இறைவா?........

விடையில்லா வினாக்கள்
கொல்லுகின்ற நோய்க்கெல்லாம்
வெல்லுகின்ற திறம் வைத்த இறைவா - சிலர்
சொல்லுகின்ற சொல்லுக்குள்ளே
கொல்லுகின்ற திறம் வைத்ததேனோ?
செல்லுகின்ற பாதையெல்லாம்
பள்ளம் வைத்து பார்க்கும் இறைவா - சிலர்
கள்ளம் வைத்து பழழகும் அழகை
உள்ளம் உணராதிருக்கச் செய்ததேனோ?
கல்லும் முள்ளும் கொண்ட வழயில்
செல்ல வைத்து ரசிக்கும் இறைவா - மனிதன்
உள்ளம் மட்டும் மறைத்து வைத்து
அள்ளல் வாழ்வில் சேர்த்ததேனோ?
இலச்சை கெட்ட மனிதரெல்லாம்
இலங்கல் வழ செய்த இறைவா - சில
நல்ல இதயம் வாழ மட்டும்
இளப்பம் மனதில் கொடுத்ததேனோ?
குழப்பம் நிறைந்த எனது வினாக்கள்
விளக்கமின்றி போனதிறைவா - நாளும்
கலக்கம் மனதில் சேர வைத்து
உளமை மட்டும் மறைத்ததேனோ?
வெல்லுகின்ற திறம் வைத்த இறைவா - சிலர்
சொல்லுகின்ற சொல்லுக்குள்ளே
கொல்லுகின்ற திறம் வைத்ததேனோ?
செல்லுகின்ற பாதையெல்லாம்
பள்ளம் வைத்து பார்க்கும் இறைவா - சிலர்
கள்ளம் வைத்து பழழகும் அழகை
உள்ளம் உணராதிருக்கச் செய்ததேனோ?
கல்லும் முள்ளும் கொண்ட வழயில்
செல்ல வைத்து ரசிக்கும் இறைவா - மனிதன்
உள்ளம் மட்டும் மறைத்து வைத்து
அள்ளல் வாழ்வில் சேர்த்ததேனோ?
இலச்சை கெட்ட மனிதரெல்லாம்
இலங்கல் வழ செய்த இறைவா - சில
நல்ல இதயம் வாழ மட்டும்
இளப்பம் மனதில் கொடுத்ததேனோ?
குழப்பம் நிறைந்த எனது வினாக்கள்
விளக்கமின்றி போனதிறைவா - நாளும்
கலக்கம் மனதில் சேர வைத்து
உளமை மட்டும் மறைத்ததேனோ?
Thursday, August 26, 2010
கனவில் வந்த அவன் ..........
மின்னலின் ஒளி கீற்றாய்
உன் பார்வைகள்
கண்ணை இடுக்கி பார்க்கும்
கலங்கிய விழிகளில்
நம் அன்பின் பிம்பங்கள்.......
நீ....நீயாகவே
நான் உனதாகவே
எந்த ஜென்ம
பந்தமிது
இந்த நிமிடம் வரையிலும் தொடர்கிறது
அழகான எல்லாம்
ஆண்மையான எல்லாம்
நீயாகிறாய்
உன் நிழலாய் இருக்கிறேன்
எனகான இடம் உன்
மனம் என்கிறாய்
பிணக்கான போதும்
கைபிரியாமல் இருக்கிறாய்........
நீண்டு வரும்
உன் கரங்களின்
அணைப்பு கதகதப்பு
இதமளிக்கும் தருணங்களில்
இதயத்தில் இமைகளில்
எனக்காக நீ இருக்கிறாய்
என நம்புகிறேன்..............
என்னை கவனிக்காமல்
இருப்பதாக காட்டினாலும்
உன் விழிகள் கவனிப்பதை
கவனித்துப் பார்த்து
கனிந்து போகிறேன்
காதலில் உறைந்து வேகிறேன்..
புகை மூட்டம் போல் உன் வதனம்
கனவில் மட்டும் வருகிறாய்
கணம் பொழுது இன்பம் தருகிறாய்........
கண் விழிக்காமல் ........
விழித்தால் எங்கோ மறைகிறாய்.......
உன் பார்வைகள்
கண்ணை இடுக்கி பார்க்கும்
கலங்கிய விழிகளில்
நம் அன்பின் பிம்பங்கள்.......
நீ....நீயாகவே
நான் உனதாகவே
எந்த ஜென்ம
பந்தமிது
இந்த நிமிடம் வரையிலும் தொடர்கிறது
அழகான எல்லாம்
ஆண்மையான எல்லாம்
நீயாகிறாய்
உன் நிழலாய் இருக்கிறேன்
எனகான இடம் உன்
மனம் என்கிறாய்
பிணக்கான போதும்
கைபிரியாமல் இருக்கிறாய்........
நீண்டு வரும்
உன் கரங்களின்
அணைப்பு கதகதப்பு
இதமளிக்கும் தருணங்களில்
இதயத்தில் இமைகளில்
எனக்காக நீ இருக்கிறாய்
என நம்புகிறேன்..............
என்னை கவனிக்காமல்
இருப்பதாக காட்டினாலும்
உன் விழிகள் கவனிப்பதை
கவனித்துப் பார்த்து
கனிந்து போகிறேன்
காதலில் உறைந்து வேகிறேன்..
புகை மூட்டம் போல் உன் வதனம்
கனவில் மட்டும் வருகிறாய்
கணம் பொழுது இன்பம் தருகிறாய்........
கண் விழிக்காமல் ........
விழித்தால் எங்கோ மறைகிறாய்.......
நடிக்கத் தெரியாமல்
நடிககத் தெரியாமல்
படித்துப் பார்க்கிறேன் - மீண்டும்
மீண்டும் சில இதயங்களை
படித்துப் பார்க்கிறேன்....
விடைகள் இல்லாமல்
வெறும் வினாக்களோடுதான்
வாழ்க்கையை
வாழ்ந்து கொள்கிறேன்- பல பொழுதுகளில்
வீழ்ந்து போகிறேன்.....
விழுந்த வேகத்தில்
எழுந்து நிற்காமல்
உடைந்து போகிறேன்
இதயம் இரும்பாய்
ஆகும் வரைக்கும்
உறைந்து போகிறேன்........
தெளிவேயற்ற பயணங்கள்
முடிவேயற்ற சோதனைகள்
முகமூடியோடு மனிதர்கள்
மூச்சு முட்டி போகிறது
முடியாமல் விடியாமல்
பயணம் நாளும் தொடர்கிறது....
நடிககத் தெரியாமல்
படித்துப் பார்க்கிறேன் - மீண்டும்
மீண்டும் சில இதயங்களை
படித்துப் பார்க்கிறேன்....
விடைகள் இல்லாமல்
வெறும் வினாக்களோடுதான்
வாழ்க்கையை
வாழ்ந்து கொள்கிறேன்- பல பொழுதுகளில்
வீழ்ந்து போகிறேன்.....
விழுந்த வேகத்தில்
எழுந்து நிற்காமல்
உடைந்து போகிறேன்
இதயம் இரும்பாய்
ஆகும் வரைக்கும்
உறைந்து போகிறேன்........
தெளிவேயற்ற பயணங்கள்
முடிவேயற்ற சோதனைகள்
முகமூடியோடு மனிதர்கள்
மூச்சு முட்டி போகிறது
முடியாமல் விடியாமல்
பயணம் நாளும் தொடர்கிறது....
Wednesday, August 25, 2010
அன்புள்ள அப்பா- இந்த
அழைப்புக்கு நீ ஏற்றவன் தானா?
என்னையும் அம்மாவையும்
நடுத்தெருவில் நடுநிசியில்
நட்டாற்றில் விட்டவனாய் தான்
உன்னை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்...
என்னை மறந்து போனவனே
என்னை துறந்து வாழ்பவனே
நீ இறந்து போனதாக
காற்று சுமந்து வரும்
செய்திக்காக
வளர்ந்து நிற்கிறேன்
என் காதுகளைத்
திறந்து வைக்கிறேன்...
அன்று நடந்த நாடகத்தை
இன்று புரிந்து கொள்கிறேன்.
அந்தக் கசந்த நாளை
எண்ணி அசந்ததுண்டு பல நாள்
சின்னஞ் சிறு வயதில்
அம்மாவின் விரலைப் பற்றியபடி
நானும் தம்பியுமாய்
வீட்டுப் படியைத் தாண்டி வருகிறோம்..
அப்பா என்ற ரத்த பந்தமும்
பாட்டி என்ற ரத்தச் சொந்தமும்
தாத்தா என்ற ஓர் உறவும்
சிற்றப்பா என்ற ஓர் உறவும்
அத்தை என்ற பல உறவும்
ஒன்றாய்க் கூடி - எங்களை
நன்றாய் விரட்டியடித்தீர்கள்...
யாரிடம் இந்தக் கதையைச்
சொன்னாலும் சொல்லி
வைத்தது போல் ஒரு
கேள்வி கேட்பார்கள்
இத்தனை பேரும்
மொத்தமாய் இருந்தும்
சத்தம் ஏதும் போடாமல்
போகாதே என்று மெதுவாய்க் கூட
தடுக்காமல் இருந்ததும் தான் ஏனோ?
அப்பா விட்டது தொல்லை
என்றிருந்தாயா?
பாட்டி குறைந்தது செலவு என
நினைத்தாயா?
தாத்தா என் பிள்ளை
ஆண்பிள்ளை என இருந்தாயா?
சிற்றப்பா எனக்கென்ன வந்தது
என்று மெளனித்தாயா?
அத்தை மிஞ்சியது சொத்து
என்று பேசாதிருந்தாயா?
அம்மாவுக்கும் உனக்குமான
சண்டையில் - எங்களை
தனியே தவிக்க விட்டதேன்?
எனது சின்னஞ்சிறிய பருவமெல்லாம்
அதட்டலிலும் மிரட்டலிலும்
விரட்டலிலுன் கரைந்து போனது....
எங்குப் போனாலும்
என்னை அந்நியப் படுத்தும்
பார்வைகளால் அநியாயமாய்
சுதந்திரத்தை அபகரித்ததுமேன்?
அப்பா அதிகமாய் பேசாத
நீயும் அம்மாவும் என்னை பற்றி
பிறர் அதிகமாய் பே(ஏ)ச
வைத்து விட்டாயே ஏன்?
அப்பா எல்லோரும் அவரவர் அப்பாவோடு
ஆடி பாடி விளையாடும் போது
ஓர் ஓரமாய் நானும் தம்பியும்
எங்கே போனான் என் அப்பன் என்று
தேட வைத்தாயே ஏன்?
சின்னச் சின்ன ஆசைகளுக்குக் கூட
ஒரு சம்பள நாளை
எதிர்பார்க்க வைத்து விட்டாயே ஏன்?
நல்லா படிச்சா
இதை வாங்கிகொடு
நல்ல பிள்ளையாய் இருந்தால்
அதை வாங்கிக்கொடு
என்று எல்லாவற்றுக்கும்
யாரையாவது கேட்க
வைத்து வாழ விட்டாயே!
பிச்சை கேட்க வைத்து
வாழ விட்டாயே அப்பா!
உனக்குப் புரிகிறதா என் வலிகள்?
உனக்கு கேட்கிறதா என் வினாக்கள்?
உரிமையோடு உறவிருந்தும்
தெருவோடு விட்டனையே
உன் உணர்வோடு எங்கள்
நினைப்பில்லையா?
உன் அம்மாவும்
எனக்கு பாட்டியுமாய்
இருப்பவளைக் கேட்டுச் சொல்
இது தப்பில்லையா?
நான் செய்த தவறென்ன
இரவெல்லாம் கேட்கிறேன் - என்
இளவயது ஆசையெல்லாம்
இமைக்குள்ளே
கண்ணீராய் கரைந்ததென்ன?
எங்கிருக்கிறாய் அப்பா? - என்
நினைவிருக்கிறதா அப்பா
அம்மாவை மறந்தாய் தப்பில்லை
உன் ரத்த பந்தமான என்னையேன்
துறந்தாய் தவறில்லையா?
ஒவ்வொரு வரிகளிலும்
நான் பட்ட ரணங்களின்
வெளிப்பாடு!
என்னை விட்டு எங்கோ இருக்கும்
உனக்கு புரியுமா? என் பாடு!
அதட்டி பேசும்
அனைவரையும் பார்க்கும் போது
விரட்டி அடித்த உன்னை
துரட்டி, துரட்டி கொல்ல வேண்டும்
என்ற எண்ணம் சுழற்றி சுழற்றி
அடிக்கிறது என்னை.
பேப்பரில் வந்ததாம்
என் படத்தோடு
பிறந்தநாள் வாழ்த்து
பேப்பரில் படம் போட்டுக் காட்டி
பாசம் என்றால்
நான் பேப்பரை தின்றா வாழ்வது?
ஆண்டுக்கொரு முறை பேப்பரில்
மலரும் உங்கள் அபரிபிதமான
அன்பை வைத்துக் கொண்டு
நாளெல்லாம் வாழ்ந்து விட இயலுமா?
பெற்ற பிள்ளையைப் பேணாமல்
ஏழைக்கு அன்னதானம் வழங்கினால்
பாவமன்னிப்பு கிடைத்துவிடும் என்ற எண்ணமா?
என்னைக் காக்க மறந்தவனே
என்னை வளர்க்கத் தவறியவனே
எந்த நம்பிக்கையில் காப்புறுதி கட்டுகிறாய்
நான் செத்தால் மொத்தமாய்
பணம் கிடைக்கும் என்பதற்கா?
எல்லா தவறும் என்
தாயுடையதாகவே இருக்கட்டும்
தறியும் தவறாதவனே
உலக மகா நல்லவனே
உண்மையுடன் இருப்பவனே
நேர்மையெனும் வழையில் நடப்பவனே
தாயெனும் கோவிலைத் துதிப்பவனே
உனக்குத் தப்பாமல் பிறந்த நான் மட்டும்
அப்பாவென வருவேன் என நினைத்தாயா?
என்னைக் காக்க வக்கில்லாத
உனகேன் மீசை?
உன் மீதான என் குற்றச்சாட்டுகள்
உறவை அறுத்தாய்
உரிமையைப் பறித்தாய்
கடமையை மறந்தாய்
ஜீவனாம்சம் கொடுக்க பயந்தாய்
கணவனாய், அப்பனாய்
இல்லாமல் இருந்தாய்
நீயேன் பிறந்தாய் - உன்
தாய் தான் உனக்கு
முக்கியமென்றால்
என் தாயை ஏன் மணந்தாய்?
எங்களை ஏன் இப்படி வதைத்தாய்?
இறுக்கம் தளர்ந்து
இமைகள் கசிந்து
இதயம் வலிக்கும் பல பொழுதும்
இதழ்கள் தவித்து
வார்த்தைகள் மறந்து
மெளனத்தில் அழுத பல பொழுதும்
ஒரு நினைப்பு மட்டும்
நிரந்தரமாய் நெஞ்சுக்குள்
நெருப்பாய் எரிந்து
கொண்டிருக்கிறது.......
இப்படி பிச்சை எடுத்து
தின்ன வைத்த உன்னை
மன்னிக்கும் மனம் வருமா
எந்த பிள்ளைக்கும்?

ஆனந்தம்.....பேரானந்தம்
சொல்லி சொல்லி
பார்க்கிறேன்
சொல்லில் தெளிவைக்
கேட்கிறேன்
தள்ளி தள்ளி
வருகிறேன்....
தவறுகள் கண்டால்
துடிக்கிறேன்
துவண்டு துவழ்ந்து
போகிறேன்
துன்பம் கண்டால்
அழுகிறேன்
துணிந்து எழுந்து
நிற்கிறேன்
துணையாய் உன்னை
அழைக்கிறேன்.......
துண்டு துண்டாய்
உடைந்தாலும்
சுக்கு நூறாய்
கிழிந்தாலும்
தீயில் கருகி
தீய்ந்தாலும்
உன் அன்பை மட்டும்
துதிக்கிறேன்........
ஒளியாய் உன்னை
கண்டதுண்டு
ஒளிரும் நிலவாய்
ரசித்ததுண்டு
துளிரும் மலராய்
தரிசித்ததுண்டு
குளிரும் பொழுதில்
குளிர்ந்ததுண்டு
வெப்பம் தணிக்கும்
தென்றலுண்டு
வெந்து தணியும்
தருணமுண்டு
எல்லாம் உந்தன்
செயல்கள் என்று
மனதில் உன்னை
தொழுததுண்டு.
அன்பே இறையே
ஆனந்தமே
அருள்வாய் நலமே
பேரின்பமே
உன்பால் தொழுகின்ற
இதயங்களில்
அன்பால் நிறைந்திடு
(இ) எப்பொழுதும்.
பார்க்கிறேன்
சொல்லில் தெளிவைக்
கேட்கிறேன்
தள்ளி தள்ளி
வருகிறேன்....
தவறுகள் கண்டால்
துடிக்கிறேன்
துவண்டு துவழ்ந்து
போகிறேன்
துன்பம் கண்டால்
அழுகிறேன்
துணிந்து எழுந்து
நிற்கிறேன்
துணையாய் உன்னை
அழைக்கிறேன்.......
துண்டு துண்டாய்
உடைந்தாலும்
சுக்கு நூறாய்
கிழிந்தாலும்
தீயில் கருகி
தீய்ந்தாலும்
உன் அன்பை மட்டும்
துதிக்கிறேன்........
ஒளியாய் உன்னை
கண்டதுண்டு
ஒளிரும் நிலவாய்
ரசித்ததுண்டு
துளிரும் மலராய்
தரிசித்ததுண்டு
குளிரும் பொழுதில்
குளிர்ந்ததுண்டு
வெப்பம் தணிக்கும்
தென்றலுண்டு
வெந்து தணியும்
தருணமுண்டு
எல்லாம் உந்தன்
செயல்கள் என்று
மனதில் உன்னை
தொழுததுண்டு.
அன்பே இறையே
ஆனந்தமே
அருள்வாய் நலமே
பேரின்பமே
உன்பால் தொழுகின்ற
இதயங்களில்
அன்பால் நிறைந்திடு
(இ) எப்பொழுதும்.
Tuesday, August 24, 2010
இதயத்தில் நீ
போராடும் மனத்தோடுதினந்தோறும் வழிந்தோடும் கண்ணீர்
மறைத்தாலும் மறையாமல்
இதயத்தில் நீ.................
விழி போகும்
வழியெல்லாம்
தேடி பார்க்கிறேன் - நீ
போன வழியெல்லாம்
வந்து பார்க்கிறேன்....
உன்னோடு நான்
நடந்த பாதைகளை
கடந்து பார்க்கிறேன்
என்னை நீ
கை விட்ட நாளை மட்டும்
மறக்கப் பார்க்கிறேன்
வலியெல்லாம் விழி நீரில்
கழுவி பார்க்கிறேன்
அந்த வழி மட்டும் தெரியாமல்
தோற்று போகிறேன்!
கன்னத்தில் கைவைத்து
எண்ணத்தில் நீ நிறைத்த
வண்ணங்கள்
எண்ணி பார்க்கிறேன்
தினம் ஒரு துளி
நிமிடமேனும் என்னை
வதை செய்யும்
இந்த நினைவுகளை
மறக்கப் பார்க்கிறேன்.
கன்னத்தில் குழி விழ
வெண்ணிற பல் காட்டி
கண் நிறைய நீ சிரித்த
கணத்தையெல்லாம்
மனதிற்குள் பூட்டி வைத்து
பூத்ததுண்டு.
கண்ணாலே நீ பேசும்
கலையெனக்கு புரியாமல்
பின்னாலே ஒரு நாளில்
எண்ணாமல் எண்ணி நகைத்ததுண்டு.
மண்ணாக போன அந்த
பொன்னான தருணங்கள்
புண்ணாக இதயத்தைத் துளைக்கின்றது........
கடந்த கடந்த........காலம்
துளித்துளியாய் சேர்த்து
வைத்த நினைவுகளை
தனித்தனியாய் பிரித்து
வைத்துப் பார்க்கிறேன்...........
இறந்த காலத்தின் மரண
ஓலங்கள்
மறைந்து போகாமல்
நிறைந்து
நெஞ்சில் உறைந்திருந்தது.
காலச்சுவடுகள் விட்டு சென்ற
கனத்த நினைவுகள்
கண்ணீர் கரையை
உடைத்து எழுந்த
காதல் தோல்விகள்
கனவும் நனவுமாய்
நிஜமும் நிழலுமாய்
பொய்யும் மெய்யுமாய்
எத்தனையோ கடந்த பாதை
அத்தனையும் இன்றெனக்கு கீதை
தோல்விகளை விற்று விற்று
வாங்கி வந்த ஞானங்கள்
வேள்விகளில் சுட்டு சுட்டு
கற்று கொண்ட பாடங்கள்
கேள்விகளைக் கேட்டு கேட்டு
விட்டு வைத்த பதில்களை
வாழ்க்கையில் தேடி வந்தேன்
வழிகள் எல்லாம் பள்ளங்கள்...........
வைத்த நினைவுகளை
தனித்தனியாய் பிரித்து
வைத்துப் பார்க்கிறேன்...........
இறந்த காலத்தின் மரண
ஓலங்கள்
மறைந்து போகாமல்
நிறைந்து
நெஞ்சில் உறைந்திருந்தது.
காலச்சுவடுகள் விட்டு சென்ற
கனத்த நினைவுகள்
கண்ணீர் கரையை
உடைத்து எழுந்த
காதல் தோல்விகள்
கனவும் நனவுமாய்
நிஜமும் நிழலுமாய்
பொய்யும் மெய்யுமாய்
எத்தனையோ கடந்த பாதை
அத்தனையும் இன்றெனக்கு கீதை
தோல்விகளை விற்று விற்று
வாங்கி வந்த ஞானங்கள்
வேள்விகளில் சுட்டு சுட்டு
கற்று கொண்ட பாடங்கள்
கேள்விகளைக் கேட்டு கேட்டு
விட்டு வைத்த பதில்களை
வாழ்க்கையில் தேடி வந்தேன்
வழிகள் எல்லாம் பள்ளங்கள்...........
Wednesday, June 9, 2010

காதலை எழுத எனக்கு சொற்கள் இல்லை
கண்ணாதாசனிடம் சண்டையிட்டு
கம்பனிடன் கடன் கேட்டு
வாலியிடம் பிச்சையெடுத்து
வைரமுத்துவிடம் யாசித்து
தாமரையிடம் திருடி எழுத பார்க்கிறேன்........................
காதல் ஒரு நெருப்பு
பார்க்க அழகாக இருக்கிறதே என்று
எடுத்து சாப்பிட முடியாத
தொடவும் முடியாது
ஆனால் அது நம்மை தொடரும்.........
அது சுகமானது என்று
நினைக்கும் மறுகணமே துயரானதும்
கூடநிறைவேறினாலும் தோற்றாலும்
வலிகள் நிரந்தரமானது!
காதல் கண்ணாமூச்சு
ஒளிந்து கொள்ளும்
தேடும் தேடி களைத்து
கண்டுபிடித்து நம்மை
களைத்து போடும்!
கடந்த காதலை கண்டு வாழாலாம்
நிறைந்த காதலை நினைத்து வாழலாம்
துறந்த காதலை மறக்காமல் வாழலாம்!
கண்ணீர் காதல்
காலம் கடந்த காதல்
கைகூடிய காதல்
கரைந்த காதல்
எதுவானாலும்காதல்
வெற்றி சுகமானதா
என்று தெரியாது! ஆனால்
காதல் தோல்வி துயரானது
என்று தெரியும், புரியும், அறியும்!
Sunday, June 6, 2010
Thursday, June 3, 2010
மாறி விடு...............
மனமாய் இருப்பதை
மனிதமாய் வைத்திருக்கிறேன்
புனிதமாய் வைத்திருக்கிறேன்
வினோதமாய் ஆக்கிவிட
மிருகமாய் ஆக்கிவிட
ஆயிரம் முயற்சிகள் ................
இதயமாய் இருப்பதை
இதமாய் வைத்திருக்கிறேன்
இனிதாய் வைத்திருக்கிறேன்
இரும்பாய் ஆக்கிவிட
இல்லாமல் ஆக்கிவிட
ஆயிரம் முயற்சிகள்.............
உள்ளமாய் இருப்பதை
உண்மையாய் வைத்திருக்கிறேன்
உள்ளதாய் வைத்திருக்கிறேன்
உருப்படியாய் வைத்திருக்கிறேன்
குப்பையாய் ஆக்கிவிட
குழப்பமாய் ஆக்கிவிட
ஆயிரம் முயற்சிகள்................
எண்ணமாய் இருப்பதை
வண்ணமாய் வைத்திருக்கிறேன்
திண்ணமாய் வைத்திருக்கிறேன்
திமிராய் ஆக்கிவிட
திவாலாய் ஆக்கிவிட
ஆயிரம் முயற்சிகள்..........
நல்லவனாய் வாழ்ந்திட
நாளும் தவிக்கிறேன்
நாயகனை வேண்டுகிறேன்
மழை நீராய் பொழிந்து
மண்ணில் கலந்து
சாக்கடையில் ஓடுகிறேன்..................
உலகம் எனக்கு
ஒளியை மறுத்து
இருளைக் காட்டுகிறது!
வழியை மறைந்து
குழியைக் காட்டுகிறது.........
நானும் வலியை மறந்து
வாழ்வைப் பார்க்கிறேன்
வாழப் பார்க்கிறேன்...........
தோல்வியாய் உள்ள வாழ்வை
வேள்வியாய் ஆக்கிக் கொள்கிறேன்.............................

Sunday, May 23, 2010
பொய்யும் புரட்டும்
நாயும் நரியும்
மனித வடிவாய் ஆனது
மெய்யும் பண்பும் ...
அன்பும் கருணையும்
பாழுங் கிணற்றில் வீழ்ந்தது
படித்தப் படிப்பும்
பெற்ற பட்டமும்
தலைகணம் மட்டும் தந்தது.
உண்மையும் நன்மையும்
நானிலம் தன்னில்
நலிந்து நலிந்து போனது.
நல்லவரெல்லாம் - மனம்
உள்ளவரெல்லாம்
வெம்பி வெறுத்து சாகுது
அல்லவரெல்லாம் - பணம்
கொண்டவரெல்லாம்
எம்பி குதித்து ஆடுது!
நாயும் நரியும்
மனித வடிவாய் ஆனது
மெய்யும் பண்பும் ...
அன்பும் கருணையும்
பாழுங் கிணற்றில் வீழ்ந்தது
படித்தப் படிப்பும்
பெற்ற பட்டமும்
தலைகணம் மட்டும் தந்தது.
உண்மையும் நன்மையும்
நானிலம் தன்னில்
நலிந்து நலிந்து போனது.
நல்லவரெல்லாம் - மனம்
உள்ளவரெல்லாம்
வெம்பி வெறுத்து சாகுது
அல்லவரெல்லாம் - பணம்
கொண்டவரெல்லாம்
எம்பி குதித்து ஆடுது!
பொய் பேசி போகும் உறவாக வேண்டாம்
மெய் பேசி வளரும் உறவாக வேண்டும்
கை வீசி போக உறவேதும் வேண்டாம்
கையோடு கைகோர்த்து துணையாக வேண்டும்!
வென்று குவிக்க தெம்பு உண்டு
நன்று செய்யும் மனங்கள் உண்டு
இன்றே தொடங்க நேரமில்லை!
என்றே பேசும் இளையர் கண்டு
நின்றே துடிக்கும் இதயம் சோர்ந்து!
முயற்சி காட்டும் முகம் கண்டு
அயர்ச்சி கொள்ளலாகாது!
வீழ்ச்சி கூட கற்கண்டு
ஆக்க வேண்டும் வழித்தேடு!
வாழ்க்கை ரொம்ப போராட்டம்
வாழ வேண்டும் அம்பாட்டம்
தோல்வி வரும் துயர் காட்டும்
துவழ வேண்டாம் துணியாட்டம்
துணையாக வருவதெல்லாம் பேயாட்டம்
ஒரு பொழுதில் மாறிவிடும் குரங்காட்டம்
பாறை ஒன்று இருக்கவேண்டும் மனமாட்டம்
பலகோடி இன்னல்களும் போகும் தூசியாட்டும்.
நன்று நினைத்து நன்மை செய்தால்
நமக்கே நலமாகும்!
வென்று குவிக்க நாள்கள எல்லாம்
இன்றே மலராகும்!
மெய் பேசி வளரும் உறவாக வேண்டும்
கை வீசி போக உறவேதும் வேண்டாம்
கையோடு கைகோர்த்து துணையாக வேண்டும்!
வென்று குவிக்க தெம்பு உண்டு
நன்று செய்யும் மனங்கள் உண்டு
இன்றே தொடங்க நேரமில்லை!
என்றே பேசும் இளையர் கண்டு
நின்றே துடிக்கும் இதயம் சோர்ந்து!
முயற்சி காட்டும் முகம் கண்டு
அயர்ச்சி கொள்ளலாகாது!
வீழ்ச்சி கூட கற்கண்டு
ஆக்க வேண்டும் வழித்தேடு!
வாழ்க்கை ரொம்ப போராட்டம்
வாழ வேண்டும் அம்பாட்டம்
தோல்வி வரும் துயர் காட்டும்
துவழ வேண்டாம் துணியாட்டம்
துணையாக வருவதெல்லாம் பேயாட்டம்
ஒரு பொழுதில் மாறிவிடும் குரங்காட்டம்
பாறை ஒன்று இருக்கவேண்டும் மனமாட்டம்
பலகோடி இன்னல்களும் போகும் தூசியாட்டும்.
நன்று நினைத்து நன்மை செய்தால்
நமக்கே நலமாகும்!
வென்று குவிக்க நாள்கள எல்லாம்
இன்றே மலராகும்!
Friday, April 30, 2010
வித்தியாசமானவர்கள் + வித்தியாசமானவள்
ஏதோ ஒன்று
...............................
எதையோ நினைத்து
..................................
எ(இ)ப்போதும்
எ(இ)ப்போதும்
...................................
தலைகணங்களின் உருவங்கள்
தலை வணங்கா உருவங்கள்
தலைகணம் காட்டும்
தலைவர் எனும் பிம்பங்கள்
தலைகணம் காட்டும்
தலைவர் எனும் பிம்பங்கள்
படிக்க படிக்க
அனுபவம் வலுக்க வலுக்க
உணர்வு மாறாதா?
ஆன்மா ஆறாதா?
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.....
ஆன்மா ஆறாதா?
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.....
பெருந்தன்மை இல்லை
புரிந்துணர்வும் இல்லை
மன்னிக்கத் தெரியவில்லை
மறக்க முடியவில்லை
இந்த தலைகணம் காட்டும்
உள்ளங்களை,
மிகவும் கேவலமாய்
நினைத்தால் கோபமாய்
பார்க்கவே வேண்டாத
இவர்களைப்
பார்க்க நேரிடும் போது
இறந்து போகலாகாதா
அன்றில் பறவையாய்
அன்னம் போல் வாழ்வு
வாய்க்காதா?
Sunday, April 11, 2010
நிம்மதி
பசுமையான விருட்சம்
ஒடி போன வருசம்
நினைத்துப் பார்க்கும் மனம்
கொஞ்சம் நிழல்
ஒரு நாற்காலி
சில புத்தகங்கள்
ஒரு மலைசாரல்
இரவும் இல்லாமல்
பகலும் இல்லாமல்
ஒரு பொழுது
முதுமையைக் காட்டும் முகம்
கண்ணை கடந்த காட்சிகள்
என்னை கடந்த நாள்கள்
நாள்களைக் கடந்த நான்
நரைத்து போன முடி
முடிந்து போன வாழ்க்கை
கண்ணாடி வழி விழி
பக்கத்தில் ஒரு கைத்தடி
பக்கத்து நாற்காலியில் மரணம்
கைகுலுக்கி குசலம் விசாரிக்கிறது........
இருந்தாலும்,
வாழ்ந்து விட்ட
நிமிசங்களின்
எச்சமாய்
மிச்சம் உள்ளதை
சுவைத்துப் பார்த்து
நகைக்கிறேன்.
நாளை என்னுடையதோ
எமனுடையதோ அறியேன்
பராபரமே!
ஒடி போன வருசம்
நினைத்துப் பார்க்கும் மனம்
கொஞ்சம் நிழல்
ஒரு நாற்காலி
சில புத்தகங்கள்
ஒரு மலைசாரல்
இரவும் இல்லாமல்
பகலும் இல்லாமல்
ஒரு பொழுது
முதுமையைக் காட்டும் முகம்
கண்ணை கடந்த காட்சிகள்
என்னை கடந்த நாள்கள்
நாள்களைக் கடந்த நான்
நரைத்து போன முடி
முடிந்து போன வாழ்க்கை
கண்ணாடி வழி விழி
பக்கத்தில் ஒரு கைத்தடி
பக்கத்து நாற்காலியில் மரணம்
கைகுலுக்கி குசலம் விசாரிக்கிறது........
இருந்தாலும்,
வாழ்ந்து விட்ட
நிமிசங்களின்
எச்சமாய்
மிச்சம் உள்ளதை
சுவைத்துப் பார்த்து
நகைக்கிறேன்.
நாளை என்னுடையதோ
எமனுடையதோ அறியேன்
பராபரமே!
Saturday, April 10, 2010
Friday, April 9, 2010
தொலைபேசியும் மாணவர்களும்.
கைத் தொலைபேசி இல்லாத உலகத்தில் மாணவர்கள் எப்படியிருப்பார்கள். அதுவும் இடைநிலைப்பள்ளி மாணவர்களையும் தொலைப்பேசியையும் பிரிக்கவே முடியாது. பல திடுக்கிடும் தகவல்கள் அவர்களின் தொலைப்பேசியில் இருக்கின்றன என்று சொன்னால் யாரேனும் நம்புவார்களா? யாரேனும் நம்புவதிருக்கட்டும் சம்பந்தப்பட்ட அந்தப் பையனின் அல்லது பெண்ணின் பெற்றோர் நம்புவார்களா?
மனதைக் குடையும் இதை யாரிடமாவது சொல்லி விட வேண்டும். அழிந்து போகும் நம் மாணவச் சமுதாயத்தைக் காப்பாற்றுவது யார். ? வீட்டுக்கும் அடங்காமல், பள்ளியில் ஆசிரியருக்கும் அடங்காமல். கண்டவர்களின் கையில் அடிபடும் இந்த மாணவர்களைத் திருத்தவே இயலாத? முடியையும் முழியையும் பார்த்தால் சில நேரங்களில் நமக்கே கூட பயமாக இருக்கிறது இந்த மாணவர்களின் நடத்தை.
வெளியில் சொல்லக் கூடியதா இந்த விக்ஷயம் என்று எனக்கும் தெரியவில்லை இருப்பினும் எனக்கென்ன வந்தது என்றிருக்க முடியவில்லையே. அல்லது இது எல்லோருக்கும் தெரிந்த புளித்துப் போன ஒன்றா? என்க்குத் தான் தெரியவில்லையோ?
மாணவர்கள் நல்லது எது கெட்டது எது என்று தெரியாத வயதில். செய்வது சரியா தவறா என்று தீர்மானிக்கவியலாத வயதில் இது போன்ற விக்ஷயங்களில் மனதைச் செலுத்துவது எந்த வகையில் ஞாயமென்று தெரியவில்லை. நாளை இந்தத் தகவல் சாதனங்களின் வளர்ச்சி இன்னும் பெரிதாக, விபரீதமாக ஆகிவிடும் பட்சத்தில் நமது குழந்தைகள் எப்படி வளருவார்கள் என்று நினைத்துப் பார்க்கக் கூட தெம்பில்லை!
இந்த மாணவச் சமுதாயம் இப்படித் தறிகெட்டுப் போக யார் காரணம். பெற்றோரா? ஆசிரியரா? நண்பர்களா, சுற்றுச் சூழலா? என்று விவாதிக்க நான் விரும்பவில்லை. இது இன்று நேற்று தொடங்கிய விவாதமல்ல. ஒரு தவறு நிகழும் போது எல்லாம் இப்படி ஆய்வு செய்து கொண்டிருப்பதை விட்டு அதனைத் தடுக்க, ஒடுக்க, அழிக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்திருந்தால் ஒரு காசுக்காவது பயன்கண்டிருக்கலாம். நாம் யார் மீதாவது பழியைச் சுமத்தி தப்பித்துக் கொள்ளும் கட்டாயத்திலா இருக்கிறோம்.கெட்டு சீரழிந்து போவது நம் மாணவர்கள். கெட்டு சீரழிந்து போன சிலரைப், அவர்களின் கதையை நிலையைப் பார்த்து கூட திருந்த முடியாதா ஜென்மங்களா நம்து மாணவர்கள். ? சரியான வழிக்காட்டி இல்லையா? சரியானதைச் சொல்ல ஆள்ளில்லையா?
இடைநிலைபள்ளியில் இவர்களது முதல் கல், காதல். கதால் வயப்பட்ட பின் அம்பிகாவதி, அமராவதியை விட நம் மாணவர்கள் மும்முறமாக செய்ல்படுகிறார்கள். இதில் பாதிப்பும் பரிதவிப்பும் என்னவோ பெண்ணுக்குத் தான். ஆனால் அதை உணரும் தருணத்தில் எல்லாம் கைமீறி போயிருக்கும். சிலர் சுதகரித்துக் கொண்டு வெளியே வருகின்றனர். பலரோ இதிலேயே முழ்கி, எதையெல்லாம் இழக்ககூடாதோ அதையெல்லாம் இழந்து ..................
கேமராவோடு கூடிய இந்த சின்னஞ்சிறு பெட்டி கடைசியில் சவப்பெட்டியைத் தயார்ப்ப்படுத்தி விடுகிறது. மாணவிகளை வைத்து வித விதமாய்( ........................) உங்கள் கற்பனைக்கு எட்டாத பல(பலான) படங்களுக்கு ஈடாக இந்த மாணவிகள் பயன்படுத்தப்படுகிறார்கள். அறிந்து நடக்கிறதா? அறியாமல் நடக்கிறதா? தெரிந்து நடக்கிறதா தெரியாமல் நடக்கிறதா? எப்படியோ நடக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை சம்பந்தப்பட்ட பெண்களின்(மாணவிகளின்) படம் (முகம்) மட்டும் தெரிகிறது.இதற்குப் பின்னால் இருப்பவர்கள் (பெரும்பாலும் ஆண்கள் முகம் தெரியாத வகையில் மிகவும் சமர்த்தியமாக இக்காட்சிகள் பதிவு செய்யப்படுகிறது. சில காட்சிகளில் சம்பந்தப்பட்ட மாணவியின் பெயர், அலைபேசி எண் சகிதம் படம் ஒடிக்கொண்டிருக்கிறது. இதுவெல்லாம் அன்றி இக்காட்சிகள் இணையத்திலும் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. மாணவிகள் ............ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சொல்வதற்கும் எழுதுவதற்கும் கூட வார்த்தைகள் இல்லை. மனம் குமுறுகிறது. நயனங்கள் இதை எழுதும் போது பல முறை பனித்துப் போகிறது. நெஞ்சு வலிக்கிறது..... அடைக்கிறது......... இதனால் பாதிப்பு யாருக்கு ஒரு பெண் தவறிழைத்தால் அந்த குடும்பமே அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது இன்னுமும், இன்றும் ஆண்களுக்கான உலகமாகத் தானே இருக்கிறது. ஆண் பிள்ளைகள் எதை செய்தாலும் அதை துடைத்து விட்டு அடுத்த கணமே நல்லவர் முகமூடியை அணிந்து கொள்ள வாய்ப்பு கொட்டி கிடக்கும் உலகமிது. ஆனால் பெண் அப்படி முடியாதே, ஆயிரத்தெட்டு வியாக்கினங்கள் பேசும் உலகம், உலகம் பேசுவதிருக்கட்டும் கூடவே இருந்து குழியில் தள்ளும் உறவுகள்.
எங்கே செல்லும் இந்த பாதை, எங்கே முடியும் இந்த பயணம்? இனி பாதை தெரியுமா? பயணம் தொடருமா இந்த மாணவர்களின் வாழ்க்கை?
ஆகவே, பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் அலைப்பேசிகளை அடிக்கடி கவனியுங்கள். யாரோடு அவர்களின் நட்பு என்று ஆராயுங்கள். ஒரு செடி நடுகிறோம்.... அது வளர மண் அணைத்து விடுகிறோம், சுற்றி வேலியிடுகிறோம், தினமும் நீர் ஊற்றுகிறோம், உரமிடுகிறோம். ஒரு செடியைக் கவனிக்க இவ்வளவு செய்யும் நாம் குழந்தைகளைக் கவனிக்க எவ்வளவு செய்ய வேண்டுமென எண்ணிப்பாருங்கள். ஆண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களே பெண்ணை மதிக்கக் கற்றுகொடுங்கள்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவது தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே என்று தான் சொல்ல முடியும். ஆசிரியர் வளர்ப்பினில் குழந்தை நல்லவனாவதாக எந்தப் பாட்டும் குறிப்பிட வில்லை. ஒரு சாதனை படைத்த பிள்ளையின் பின்னால் ஒரு சாதனை படைத்த பெற்றோரிருப்பதாக நான் நம்புகிறேன். அந்த சாதனை பெறோர்கள் நீங்கள் தான். அந்த சாதனை மாணவர்கள் நீங்கள் தான். எஅங் விழுந்தோம் என்பது முக்கியமல்ல எங்கே பிறந்தோம் என்பது போல். என்ன சாதித்தோம். புத்தர் அரண்மனையில் பிறந்தார், அரசராகவில்லை போதி மர புத்தனாய் கொல்லாமையைப் போதித்தான். இயேசு நாதர் மாட்டுக் கொட்டகையில் பிறந்தார் மாடு மேய்பவனாகவில்லை, மாறாக ஆன்மா பலம் பொருந்திய போதகனாக விளங்கினான்.
விழுந்தோம் என்பதை விட எழுந்தோம் சாதித்தோம் என்பது தான் முக்கியம். ஆகவே குழந்தைகள் தவறிழைத்தப்பின் அவர்கள் தலையில் பாரமான கல்லைத் தூக்கி வைத்து அவர்களை அவமதித்து விடாதீர்கள். வாழ வழிசெய்து கொடுங்கள். இருளில் இருந்து வெளியே வர உதவுங்கள்.

Wednesday, April 7, 2010
இளமை இதோ இதோ!
கொஞ்சம் கொஞ்சமாய்
நெஞ்சம் முழுவதும்
அலைகள்
மிஞ்சும் வார்த்தைகளில்
கொஞ்சும் பார்வைகளில்
கரையைத் தாண்டிய அலைகள்
மிச்சம் ஏதுமின்றி
கொட்டி வைத்த பின்னே
அச்சம் தேடி வந்து
உச்சம் காட்டுதம்மா!
தேர்வை எழுதக்கூட
ஆழ்ந்து படிக்கவில்லை
பார்வை உன் பார்வையில்
முழ்கிக் கொண்டே
வாழ்வைத் தேடுகிறேன்.
இழைத்தப் பிழைகளெல்லாம்
நெருப்பாய் சுடுகிறது
உண்மை உரைக்கும் போது
விழிகள் அழுகிறது
சொன்ன சொல்லை
ஒரு நாளும்
கேளாத செவிகள்
கண்ட சொல்லை
கேட்கும் போது
குனி குறுகி மடிகிறது.
வயது தந்த நோயை
காலில் உள்ள செருப்பாய்
வீட்டின் வெளியே
நிறுத்தி வைப்பாய்
நட்பும் நடப்பும் அறிந்து
வாழ்வில் வெற்றி கொள்வாய்.
நெஞ்சம் முழுவதும்
அலைகள்
மிஞ்சும் வார்த்தைகளில்
கொஞ்சும் பார்வைகளில்
கரையைத் தாண்டிய அலைகள்
மிச்சம் ஏதுமின்றி
கொட்டி வைத்த பின்னே
அச்சம் தேடி வந்து
உச்சம் காட்டுதம்மா!
தேர்வை எழுதக்கூட
ஆழ்ந்து படிக்கவில்லை
பார்வை உன் பார்வையில்
முழ்கிக் கொண்டே
வாழ்வைத் தேடுகிறேன்.
இழைத்தப் பிழைகளெல்லாம்
நெருப்பாய் சுடுகிறது
உண்மை உரைக்கும் போது
விழிகள் அழுகிறது
சொன்ன சொல்லை
ஒரு நாளும்
கேளாத செவிகள்
கண்ட சொல்லை
கேட்கும் போது
குனி குறுகி மடிகிறது.
வயது தந்த நோயை
காலில் உள்ள செருப்பாய்
வீட்டின் வெளியே
நிறுத்தி வைப்பாய்
நட்பும் நடப்பும் அறிந்து
வாழ்வில் வெற்றி கொள்வாய்.
Sunday, April 4, 2010
மெளனம்
நீ பல பொழுதுகளில்
எனக்கு பகையாய் இருக்கிறாய்!
உன்னை எனக்குப் பிடிக்கும்
ஆனால் உனக்குத் தான் என்னை பிடிக்கவில்லை. என் போதாத காலத்தில் நீ என்னை விட்டு விலகி விடுகிறாய். இப்பொழுதெல்லாம் நான் உன்னை அடிக்கடி தேடுகிறேன், இருப்பினும் நீ என்னை அலட்சியப்படுத்துகிறாய். உன்னை அணிய மறந்த பல தருணங்கள் நான் அல்லல்பட்டதுண்டு. சொல்ல வேண்டியதெல்லாம் கொட்டி விடும் பழக்கத்தினால் நான் உன்னை பெரிதும் விரும்புகிறேன் என்றே சொல்லவேண்டும். நான் மறந்தாலும் நீ என்னை மறவாமலிருத்தல் வேண்டும். பல வேளைகளில் உன்னை மறந்து, துறந்து விடுவதால் நான் பட்ட ரணங்கள் சாதாரணனானவையல்ல. அவை என்னை உன்பால் அன்பு கொள்ளத் தூண்டுகிறது. நீ என்னை தள்ளி, ஒதுக்கி விட்டு போனாலும், நான் உன்னை நெருங்கி வருவேன், முயற்சிப்பேன். என் முயற்சிகளை யார் முறியடித்தாலும் நான் முதலில் தேடும் கவசம் நீ தான். நான் தேட தொடங்கும் முன்னே நீ வருவதாகதெனினும், நான் தேட தொடங்கியப் பிறகேனும் என் அருகில் வரலாகாதா? எப்போதும் உன்னை என் சட்டை பையிலோ, முடிந்தால் உதட்டிலோ தான் பத்திரப்படுத்த முயல்கிறேன். என் செய்வது அது முடியாமல் போகையில் நான் மாய்ந்து போகிறேன். அப்போதெல்லாம் நீ எங்கோ தூரத்தில் நின்று கொண்டு என்னை பார்த்து ஏளனமாக மிக ஏளனமாக நகைக்கிறாய் என்பது மட்டும் சாஸ்வதம். அப்படி என்ன என்னோடு உனக்குப் பகை. என்னை வம்பில் விட்டு தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதில் உனக்கென்ன சுகம். வா தயவு செய்து வந்து விடு. என்னோடு இரு. எப்பொழுதேனும் அல்ல. இனி எப்போதும் நீ என்னுடனேயே இருந்து விடு. வாழ்க்கை வட்டம் என்னை வெளியே தள்ளுகிறது. வட்டத்திற்குள் இருக்க எனக்கும் விருப்பமில்லையாதலால் நான் இனி மெளனியாகிறேன். என்னை உன்னுள் புதைத்து விடு. இல்லை நானே உன்னுள் புதைந்து கொள்கிறேன். இதயத்தைப் பூட்டிக் கொள்கிறேன். இதயம் பூட்டப்பட்டால் தான் நீ வசப்படுவாய். என்னை வசந்தமாக்குவாய். மெளனம் ஆன்மாவை நிரப்பட்டும்.

Friday, April 2, 2010
நட்பு
விடாமல் பெய்யும் அடை மழையாய் எண்ணமும்
சொட்டு சொட்டாய் பெய்யும் தூறாலாய் நினைவும்
பட்டும் படாமலும் கொட்டும் பனித்துளியை ஞாபங்கங்களும்
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றலாய் நானும்
விட்டு விட்டு தூரம் போகும் நிழலாய் நீயும்
சுட்டு சுட்டு போட்டலும் உயிர்க்கும் நட்பாய் நாமும்
திட்டு திட்டாய் கொட்டி வைத்த தீவாய் இருப்போம்.
நட்டு நட்டு நட்பு செடியை வளர்ப்போம்.

படிக்கும் தருணம்
படித்துப் படித்தே
மடிந்து போக
தருணமொன்று வாய்க்காதா?
மடிந்த பின்னும்
நம்மை படிக்க
இதயமொன்று வேண்டாமா?
கலைந்த கனவு,
இழந்த வாழ்வு,
தொலைத்த நிமிடம்,
என்று எண்ணியெண்ணி
ஏங்கிக் கிடக்கையில்
படித்தப் புத்தக
எண்ணிக்கை
எள்ளி நகையாடுகிறது என்னை!
பேச, நகைக்க, பார்க்க
நேரம் இருந்தது,
படிக்க வந்த போது மட்டும்
நேரம் இறந்தது!
படித்த உடனே
மறந்த புத்தகம்,
படித்துப் படித்துச்
சுவைத்தப் புத்தகம்,
படிக்க நினைத்து
வைத்தப் புத்தகம்
படித்தப் பின் இதயம் வெடித்து
அழுத புத்தகம்
படித்து விட்டு தலையில் அடித்து
கிழித்தப் புத்தகம்
இத்தனை புத்தகம்
கற்ற போதும்
கல்லாத புத்தக
வரிசை நீண்டு
கொண்டே போகிறது!
படிக்க வேண்டுமென்று
துடிக்கத் துடிக்க பேசிய
வார்த்தையெல்லாம்
செவியில் வந்து நின்று
பாடாய் படுத்துகிறது!
ஆயுள் குறையும் முன்னே
ஆன்மா பிரியும் முன்னே
இவற்றைப் படிக்கும்
தருணம் வாய்க்காதா?
மடிந்து போக
தருணமொன்று வாய்க்காதா?
மடிந்த பின்னும்
நம்மை படிக்க
இதயமொன்று வேண்டாமா?
கலைந்த கனவு,
இழந்த வாழ்வு,
தொலைத்த நிமிடம்,
என்று எண்ணியெண்ணி
ஏங்கிக் கிடக்கையில்
படித்தப் புத்தக
எண்ணிக்கை
எள்ளி நகையாடுகிறது என்னை!
பேச, நகைக்க, பார்க்க
நேரம் இருந்தது,
படிக்க வந்த போது மட்டும்
நேரம் இறந்தது!
படித்த உடனே
மறந்த புத்தகம்,
படித்துப் படித்துச்
சுவைத்தப் புத்தகம்,
படிக்க நினைத்து
வைத்தப் புத்தகம்
படித்தப் பின் இதயம் வெடித்து
அழுத புத்தகம்
படித்து விட்டு தலையில் அடித்து
கிழித்தப் புத்தகம்
இத்தனை புத்தகம்
கற்ற போதும்
கல்லாத புத்தக
வரிசை நீண்டு
கொண்டே போகிறது!
படிக்க வேண்டுமென்று
துடிக்கத் துடிக்க பேசிய
வார்த்தையெல்லாம்
செவியில் வந்து நின்று
பாடாய் படுத்துகிறது!
ஆயுள் குறையும் முன்னே
ஆன்மா பிரியும் முன்னே
இவற்றைப் படிக்கும்
தருணம் வாய்க்காதா?
Thursday, April 1, 2010
அன்புக்குரியவர்களுக்கு,
எங்குத் தொடங்குவது இதை என்று தெரியவில்லை தான், இருந்தாலும் இப்பொழுதேனும் தொடங்கிவிட வேண்டும் என்று நினைத்தேன். எதை முதலில் எழுதுவது, இதை எழுத தான் வேண்டுமா? என்று மீண்டும் மீண்டும் மனம் என்னை அலைகழிக்கிறது. நீண்ட நெடு நாள்களாக மனதில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் இந்த எண்ணங்கள் என்னை ரொம்பவும் பாதித்துள்ளது. மனம் நொந்து, வெறுத்து, ஒதுங்கிப் போக முற்பட்ட போதெல்லாம் அறிவு விழித்துக்கொண்டு எழுப்பி விட்டுள்ளது. இருந்தாலும் இதை சொல்லிவிட தான் வேண்டும். இன்றில்லாவிட்டால் என்றேனும் ஒரு நாள் இது மனதை ரணப்படுத்தி விடும் . அதன் பாதிப்பு எப்படியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே பயமாக உள்ளது. தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முந்நூறு முறை அரற்றுகின்ற இதயங்களே உங்கள் செவிகளைச் கொஞ்ச நேரம் இரவல் தாருங்கள்!
தமிழுக்கு நேர்ந்த சாபம். அதற்குச் சாபவிமோசனம் எங்குக் கிடைக்கும்? யார் கொடுப்பார்கள்? எப்படிப் பெறுவது? என்று கிடைக்கும்? கிடைக்குமா? என்ற வினாக்களைத் தினமும் நெஞ்சில் சுமந்த வண்ணம் பயணிக்கும் இந்த பயணம் எனக்குப் பிடிக்கவில்லை. சுதந்திரமின்றி தமிழ் மொழிக்கு என்ன நேருமோ? தமிழினம் என்னாகுமோ? நமது சந்ததியினர் இந்த மண்ணில் வாழுவார்களா என்ற சந்தேகங்களைச் சுமந்த வண்ணம் தினம் தினம் செத்து செத்துப் பிழைக்கும் தருணங்களை நான் வெறுக்கிறேன். தினம் தினம் உலகின் ஏதாவது ஒரு மூளையில் தமிழினத்தின் அடையாளமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இதயங்களே என் வேதனை உங்களுக்குப் பிடிப்படுகிறதா? அல்லது இது அர்த்தமில்லாத பயம் என்று ஒதுங்கிப்போக முற்படுகிறீர்களா?அப்படி என்னத்தான் துன்பம் நேர்ந்து விட்டது இவர் இப்படி தேவையேயில்லாமல் அரற்றுவதற்கு என்று அலட்சியத்தோடு இதைப் படிக்கிறீர்களா?
தமிழ் செய்யும் உள்ளங்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் பற்றாளர்களே, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களே, தமிழ் எங்கள் உயிர் என்று முழக்கமிடும் இதயங்களே, உண்மையைச் சொல்லுங்கள் என் பிதற்றல் வெறும் குமுறலா? இது கண்காணிக்கத் தேவையற்றதா? தமிழுக்காக உழைப்பவர்களை எங்குக் கண்டாலும் தலை வணங்குகிறேன். ஆனால், என்ன காரணமோ, சாபமோ தெரியவில்லை தமிழ் செய்யத் துடிக்கும் சான்றோர்களிடையே ஒரு ஒருமைபாட்டைக் காணமுடியவில்லை! நான் செய்வது சரி என்று ஒரு சாராரும், நான் செய்வது மட்டும் தான் சரி என்று மற்றொரு சாராரும் தத்தம் எண்ணங்களோடு செயல்படுவது வேதனைக்குரியதாக இருக்கிறது. கற்ற மேன்மக்கள் சமுதாய நலன் கருதி தமிழ் என்ற பாசப்பிணைப்பில் இணைவது சாத்தியமாகாதா? எல்லோரும் தமிழ் வாழ வேண்டும், தமிழ் இம்மண்ணில் ஆலவிழுதாய், ஆணிவேராய் படர வேண்டும், நிலைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஏதேதோ செய்கிறார்கள், அதை இணைந்து செய்வதாகாதா? தமிழ் மொழி ஆராய்ச்சிக் கழகம் ஒன்று தொடங்க வேண்டுமாயின் இவர்கள் எல்லாம் மனம் வைத்தால் ஆகும். பிரிந்து, பிளவுப்பட்டிருக்கும் போதே இவ்வளவு சாதிக்க முடிந்த இவர்களால் இணைந்து செயல்படும் போது இன்னும் அதிசயத்தக்க, அசாத்தியமான காரியங்களை ஆற்ற இயலும் என்று நம்புகிறேன். மூவேந்தர்கள் பிளவுப்பட்டு இருந்ததால் தமிழுக்கு ஏற்பட்ட இழப்புகள் பல. அவர்களைச் சாட நமக்கென்ன தகுதியிருக்கிறது. நாமும் இப்பொழுது அதை தான் செய்து கொண்டிருக்கிறோம்(கொன்றிருக்கிறோம்.) இறப்பு வீட்டில் பிணமாக இருக்க வேண்டும், திருமண வீட்டில் நான் தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதெல்லாம் சாத்தியப்படுமா? கொஞ்சம் நாண் அகற்றப் பட்ட வில்லாக இருக்கக் கூடாது? தமிழ், தமிழர்கள் என்ற எண்ணத்தில் ஒன்றிணையக் கூடாதா? தலைவர்கள் அவரவர் நலனுக்காகப் பலவற்றை இழந்து விட்டனர் என்று சாடுகிற நாமும் பல நேரம் அதை தான் மீண்டும், மீண்டும் செய்கிறோம் என்பதை மற(று)ந்து விடுகிறோமா? அல்லது மறந்து விட்டதைப் போல் பாசாங்குச் செய்கிறோமா? நல்லது செய்யும் போது தட்டிக் கொடுத்து, தோள் கொடுத்து உதவ வேண்டாம், குறை கூறாமலாவது இருக்கலாமே! நல்லதை யார் செய்தால் என்ன, நாமும் அதற்கு உதவலாமே என்ற எண்ணத்தை வளரவிடுவோம். என்னால் மட்டும் தான் தமிழை வாழ வைக்க முடியும் என்று முதுகில் சுமையைச் சுமந்து கொண்டு திரிவதெல்லாம் எனக்கென்னவோ சரியென்று படவில்லை! உங்கள் எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன் ஆனால், அந்த இறுமாப்புக்கு நான் தலைகுனிகிறேன். இழக்கின்ற சமுதாயமாகப் பல காலம் நமது அடையாளங்களை இழந்து விட்டோம். இனியும் இழக்க உள்ளத்தில் தெம்பில்லை! உண்மையை உரைக்க வேண்டுமாயின் துணிவில்லை என்பதுதான் இதற்குப் பொருத்தமாக இருக்கும். நாளை தமிழுக்கு என்ன நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தை அர்த்தமற்றதாக ஆக்க நமக்கு ஓர் ஆயுதம் தேவை, அது ஒற்றுமை என்ற ஒரு ஒற்றைச் சொல் தான். ஒற்றுமைக்கும் தமிழருக்கும் அக்காலம் தொட்டு இக்காலம் வரை பகை தானா? அந்தப் பகையை வேரறுப்பது எக்காலம்? தொன்மை, பழமை, இனிமை, வளமை, இளமை, வன்மை, மேன்மை, உண்மை, செம்மை, வாய்மை, தன்மை, என்று அனைத்து ’மை’ களையும் தன்னகம் கொண்ட தமிழுக்கு ஒரு ’மை’ என்ற ஒற்றுமை கிட்டுவது எக்காலம்? ஒற்றுமைக்கும் தமிழுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் அப்படி என்னத்தான் தீர்க்கவே இயலாத பகை என்று பல நாளும் என்னை நானே கேட்டு கேட்டு மாய்ந்து போகிறேன். காய்க்கும் மரம் தானே கல்லடி படும் , ஆக்கும் கரம் தானே சொல்லடி படும். நல்லது செய்ய என் இந்த தயக்கம். பாரதி கண்ட கனவாய் நானும் கனவோடு போய் சேர்ந்து விடுவேனோ? பதைகள் இங்கே பயணத்தை இன்றே இப்போதே தொடங்குவது நலமன்றோ?இதையெல்லாம் குத்திக்காட்ட, சொல்லிக்காட்ட இவருக்கென்ன தகுதி இருக்கிறது என்று பலரின் கேள்விகள் செவியில் விழாமல் இல்லை! எல்லாம் வெளியில் இருந்து பார்க்கும் போது சுலபமாகத் தான் தெரியும் , இறங்கி வேலை செய்ய முடியுமா, சேவை செய்ய இயலுமா இவர்களால் என்று எனக்கே ஆப்பு அடிக்கும் சத்தமும் காதில் விழாமல் இல்லை! நல்லதைச் செய்வோம் முடியாவிட்டால் சொல்வோம் நல்லது இன்றே நடக்காது, நாளை நடக்கும், நாளை மறுநாள் நடக்கும் , அடுத்த வாரம் நடக்கும், அடுத்த மாதம் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் தமிழுக்கு இழுக்கென்றால் அது என் முகத்தில் காரி உமிழ்வது போல் நினைக்கும் சாதரண, மிகச் சாதரண சக பயணி தான் அடியேனும்.

Tuesday, March 30, 2010
பொய் முகம்
ஒவ்வொரு பொழுதும்
ஒவ்வொரு விதமான
பொய் முகங்கள்
மெய் பேசும்...................
பொய்யான முகங்கள்
செய்கின்ற நன்மை
எண்ணிலடங்காது..............
என்னை எனக்குக்
காட்டும்
தன்னை எனக்குக்
காட்டும்
விண்ணைத் தொட
எண்ணி
மண்ணைத் தொட்ட
பொய் முகங்களை
எனக்குப் பிடிக்கும்............
அதிர்ந்து போவேன் சில பொழுது
அறைந்து பேசும் தருணங்களில்
பதிவு செய்த
பதிவுகளை
மீண்டும் , மீண்டும்
நினைக்கையிலே
கற்ற பாடம் பலவாகும்
பெற்ற அனுபவம் புதிதாகும்.
நம்மை பற்றி நம்மிடமே
நா கூசமல் பேசும்
பொய் முகம்
நன்மை கொஞ்சம் நக்கல்
கொஞ்சம் அதில் மிஞ்சும்
தன்மையின்றி பேசிய பின்னர்
உண்மை சொன்னேன் என்று
உர(ரை)த்துச் செ(சொ)ல்லும்
உலகம் தலைகீழாய்
நம்மை தள்ளும்!
பொய் முகம்
கண்டு, கண்டு
மெய்யான முகமறிய
தவறினேன்
செய்யாத தவமெல்லாம்
பொய்யாகி போக
மெய் காண வேண்டி
போகிறேன்.
ஒவ்வொரு விதமான
பொய் முகங்கள்
மெய் பேசும்...................
பொய்யான முகங்கள்
செய்கின்ற நன்மை
எண்ணிலடங்காது..............
என்னை எனக்குக்
காட்டும்
தன்னை எனக்குக்
காட்டும்
விண்ணைத் தொட
எண்ணி
மண்ணைத் தொட்ட
பொய் முகங்களை
எனக்குப் பிடிக்கும்............
அதிர்ந்து போவேன் சில பொழுது
அறைந்து பேசும் தருணங்களில்
பதிவு செய்த
பதிவுகளை
மீண்டும் , மீண்டும்
நினைக்கையிலே
கற்ற பாடம் பலவாகும்
பெற்ற அனுபவம் புதிதாகும்.
நம்மை பற்றி நம்மிடமே
நா கூசமல் பேசும்
பொய் முகம்
நன்மை கொஞ்சம் நக்கல்
கொஞ்சம் அதில் மிஞ்சும்
தன்மையின்றி பேசிய பின்னர்
உண்மை சொன்னேன் என்று
உர(ரை)த்துச் செ(சொ)ல்லும்
உலகம் தலைகீழாய்
நம்மை தள்ளும்!
பொய் முகம்
கண்டு, கண்டு
மெய்யான முகமறிய
தவறினேன்
செய்யாத தவமெல்லாம்
பொய்யாகி போக
மெய் காண வேண்டி
போகிறேன்.
கவிதை கேளுங்கள் கருத்து சொல்லுங்கள்
முடியாது என்பதும்
நடவாது என்பதும்
முடமான வார்த்தைகள்
முடியும் என்றும்
நடக்கும் என்றும்
திடமாக நம்புங்கள்
இயலாது என்பதும்
இல்லை என்பது
தொல்லையான வார்த்தைகள்
இயலும் என்பதும்
இருக்கும் என்பதும்
இனிப்பான அனுபவங்கள்
வெற்றி என்பதும்
தோல்வி என்பதும்
துரத்தி வரும் சொர்கங்கள்
பெற்றோம் என்பதும்
விட்டோம் என்பதும்
தவிர்க்க முடியாது தருணங்கள்!
நடவாது என்பதும்
முடமான வார்த்தைகள்
முடியும் என்றும்
நடக்கும் என்றும்
திடமாக நம்புங்கள்
இயலாது என்பதும்
இல்லை என்பது
தொல்லையான வார்த்தைகள்
இயலும் என்பதும்
இருக்கும் என்பதும்
இனிப்பான அனுபவங்கள்
வெற்றி என்பதும்
தோல்வி என்பதும்
துரத்தி வரும் சொர்கங்கள்
பெற்றோம் என்பதும்
விட்டோம் என்பதும்
தவிர்க்க முடியாது தருணங்கள்!
Subscribe to:
Posts (Atom)