நினைவுக்குள் முள்ளாய்
மனதிற்குள் கல்லாய்
உன் ஞாபகம்
என்றைக்குத் தீரும்
என்றென்றும் தீராத
இந்த பாரம்.....
நீ என்பதென்றும் நிஜமானதில்லை
நான் என்பதென்றும் உனதானதில்லை
நாம் என்பதென்றும் உறவானதில்லை
கனவென்பது மட்டும் நிஜமாகி போக
கண்ணீரே வாழ்விம் வரவாகி போகும்.
கண்ணோடு நான் இறந்தகாலம்
நெஞ்சோடு நீ நிகழ்காலம்
கண்ணீரில் நம் எதிர்காலம்
காதல் கொள்பவர்களுக்கு
இதுவே நிரந்தர கோலம்.....
உண்மை சொல்லாத நானும்
மெளனம் உடைக்காத நீயும்
மனம் கொள்ளாத ஒன்றை
நாம் கொன்றோமே நன்றாய்.....
இதயம் மறைத்ததை எண்ணி
இன்று அழுகின்ற நம்மை
கொன்று போட்டாலும் நன்மை
என்று சொல்வதே உண்மை....