Pages

Tuesday, October 19, 2010

தமிழ்ப் பள்ளி

வேலையே செய்யாது- எந்த
சேவையும் ஆற்றாது
தேவை ஏற்பட்டால்
காலையும் வாரிவிடும்
தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் - பல
தெய்வம் இதை போற்றும்.....

ஊமையாய் பல வேசம்
உண்மையேயில்லாத நேசம்
உருவாக்கப் பணியில்
ஊனப்பட்ட பிணிகள்...
தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் - பல
தெய்வம் இதை போற்றும்.....

வேலை கொடுத்தால் பல குறைகள்
வெட்டி முறித்ததாய் தினம் உரைகள்
தலைவனை மயக்கும் சாகசங்கள்
தலைவிரி கோலமாய் சில முகங்கள்.....

பணியைச் செய்பவருக்கே பணியென
பணித்திடும் தலைவனிடத்தில் ஒரு கேள்வி
சுமையைச் சுமப்பவரே சுமைதாங்கியானால்
சோம்பேறிக்குச் சம்பளம் கொடுப்பதேன்????????????????

கம்பன் விழா

கம்பன் விழா கண்டெடுத்த தங்கமே
தமிழ் தலைவர்களில் நீரென்றும் சிங்கமே
தலைமுறைக்குத் தமிழ் என்ற முழக்கமே - உன்
கனவெல்லாம் நிஜமாகும் சீக்கிரமே.

எண்ண மாட்டா மக்கள் கூட்ட வெள்ளமே
எண்ண எண்ண கம்பன் தமிழ் இனிக்குமே
எண்ண வேண்டுமிதை என்று எண்ணித்தான் - உன்
எண்ணம் கொண்ட ஆசை வெற்றிதான்

உண்ண உணவும் உறங்க இடமும்
இன்னும் பிறவும் செய்த நன்றியே
உனக்கு சொல்ல இல்லை வார்த்தையே-இங்கு
உன்னை வாழ்த்தும் வயதெனக்கில்லையே

தமிழுக்காக உழைப்பவரை எங்காணிணும் வணங்குகிறேன்
தமிழ் செய்யும் தமிழே உன் தாழ் பணிக்கிறேன்
தமிழின்னும் நீ செய்ய கரம் கூப்பி யாசிக்கிறேன்
தமிழாய் நீடுழி வாழ தமிழை வேண்டுகிறேன்...