வயல் வெளியின்
மேற்பரப்பில்
ஒரு பறவையாய்
சிறகடிக்கிறது
மனம்.......
விண்வெளி எங்கும்
வெண்சிறு மேகமாய்
நகர்கிறது
மனம்...
மலைத் தொடர்
தோறும்
நதியாய்
ஊர்கிறது
மனம்........
வானந்திரமெங்கும்
ஒரு வானரமாய்
தாவி
குதிக்கிறது
மனம்.........
புகை மூட்டமாய்
முகம் காட்டும்
மேகங்களில்
நீர்த்துளியாய்
கரைந்து
போகிறது
மனம்..........
கடல் நீரின்
மேற்பரப்பில்
ஆதவனின்
ஒளிகரங்கள்
போட்ட கோலங்களில்
காணமல்
போகிறது
மனம்..........
நீண்டு போன
பயணத்தில்
நயனம்
கண்டு கொண்ட
அழகையெல்லாம்
துண்டு துண்டாய்
எழுதி வைத்து
ரசிக்கிறது
மனம்........