Pages

Saturday, August 27, 2011

வெற்று வெளி



அடிவயிற்றில்
தீ மூண்டு
என்னை
அலைகழிக்கிறது..

உடலெங்கும்
நரம்புகள் முறுக்கேறி
என்னை வதைக்கிறது..

விழி படலம்
வெளியாகி கோபம்
அனல் பறக்கிறது..

சொல்லோடும் பல்லோடும்
வார்த்தை தொண்டை
குழியில் இறக்கிறது...

கோபத்தின் உச்சத்தில்
கண்ணீர் பிறக்கிறது
மெளனத்தில் அதை
அடக்கி மனிதம்
சிரி(ற)க்கிறது...

எனக்குள்ளே என்னை
தேடி நிமிடம் கரைகிறது
எதை எதையோ நான்
தேடி நான் தொலைகிறது

விதைக்குள்ளே மரமாகும்
முயற்சி தொடர்கிறது
அதை கையாள தொடங்கையிலே
மரணம் நிகழ்கிறது..

சதைக்குள்ளே புதையுண்ட
உள்ளம் அழுகிறது
கதையேதும் புரியாமல்
மெல்ல நகர்கிறது..

தறிகெட்டு பிழையான
வரிபோல வாழ்க்கை
பயணம் தொடர்கிறது...

முகம் காட்டி
நகைகின்ற பொய்கள்
தெரிகின்றது
அகம் காட்ட
மறுக்கின்ற உண்மை
புதைகின்றது...

விதியென்ன விடையென்ன
விடியல் கேட்கிறது
விலகியே நின்றபடி
விளக்கம் போகிறது....