Pages

Saturday, November 19, 2011

சுட்டுப் போட்டாலும்
படிப்பு வராத பிள்ளையாய்
இருந்திருக்கலாம்....

மழைக்காகக் கூட
பள்ளியில் ஒதுங்காத
பிள்ளையாய்
இருந்திருக்கலாம்....

படித்துக் கொண்டே
இருக்கும் பிள்ளையாய்
கூட இருந்திருக்கலாம்....

அறிவாளி என்று சொல்லவும்
முடியாமல்....
முட்டாள் என்று முழுசாகவும்
நனையாமல்
இப்படி இடைப்பட்ட நடுத்தரமாய்
இருப்பதில் தான் .....

7ஏ எடுத்தால் தான் பிள்ளையா?
6ஏ,4ஏ,3ஏ,2ஏ என்று எடுத்தால் தொல்லையா?
பெற்றவர் சும்மா இருந்தாலும்
சுற்றம் கூடி என்னை
குற்றம் சொல்லும் போது
ஏன் பிறந்தோம் என்றிருக்கிறது?
இப்படியே இறப்போம் என்று தோன்றுகிறது.........

7ஏ  7ஏ என்று பேய் பிடித்து
அலையும்  பெற்றோரே
சுற்றமே  உங்கள் பிள்ளைகள்
7ஏ எடுக்க வாழ்த்துகள்....!