Pages

Wednesday, December 22, 2010

தங்கைக்கு.............

தங்கச்சி.... தங்கச்சி
எது தான் உன் கட்சி?
உன் புருஷன் ஒரு பேமாளி
அவனைப் பெத்தவளோ சோமாளி
அவன் பக்கம் பேசுகிற கூட்டமோ பெருச்சாளி
உன்னை பெத்தவளோ ஏமாளி
கூட பொறந்த பொறப்பு நாங்களெல்லாம் கோமாளி.............

கொண்டவனைனக் கோட்டை விட்டு வந்தவளே.....
பெத்தவளையும் வயிறெரிய விட்டு நின்றவளே........
உடன் பிறந்த என்னோடும் பகையாகி போனவளே.......

தங்கச்சி தங்கச்சி
எது தான் உன் கட்சி?

நாயமெல்லாம் உன் பக்கம் தான் இருக்க..?
அநியாயமெல்லாம் உன் பக்கம் தான் இருக்கா?

அதை பற்றி பேசினா வெறுப்பா?
எதை பற்றி தான் நீ கவலை படுவாய் பொறுப்பா?

கட்டினவன் மேல உனக்குச் சந்தேகமா?
எட்டி அவனை உதைத்து விட்டால் அது தீருமா?
சட்டி பானை போல ஒரு வாழ்க்கை போதுமா?-வெறும்
கட்டிடமா நீ இருந்தா மனசு ஆறுமா?

ஏசி விட்டால் பேசி விட்டால் பகையாகுமா?
உடன் பிறந்த நேசமெல்லாம் பொய்யாகுமா?

உன் சோகம்
என் மனதைக் குத்துகிறதே
நெருப்பு பட்ட புண்ணாக பற்றுகிறதே!

உன் நலம் வேண்டும்
அனைவரிடமும் பகை வேண்டுமா?
உன் மெளனத்தை உடைக்க
ஒரு வழி கூறம்மா?

சித்தமெல்லாம் உன் மேல் நிறுத்தி
நித்தம் நித்தம் வேண்ட ஒரு தாயுண்டு...
சொந்தமென்ன பந்தமென்ன என்று வெறுத்தாலும்- உன்
சோகம் கண்டு நோக பல மனமுண்டு....

ஆத்திரத்தில் பேசி விட்ட வார்த்தையை விடு
அன்பு கொண்டு பேச வந்தால் வாய்ப்புக் கொடு
அழகாக சிரித்து கொஞ்சம் பேசி விடு...
அடிக்கிற கரம் தான் அணைக்குமென்று
படித்தெல்லாம் மறந்தாச்சா?
இடி இடிப்பது போல பேசி - உன்னை
நினைக்கிற மனச புதைத்தாச்சா?

தாய் வீடே கதியென்று வந்த பின்னே- உன்
தலைகணத்தை விட்டு விடு சின்ன பெண்ணே.

சொல்வதற்கு ஆயிரனம் தான் வார்த்தையுண்டு - நீ
கேட்டுக் கொண்டால் வாழ்க்கையில் நன்மையுண்டு....

உன் 'ஈகோவைத்' தூக்கி
அந்தக் குப்பையில் போடு
உன் பிடிவாதத்தை பிடி தளர்த்தி
வாழ்க்கையைப் பாரு.....

சுகம் எல்லாம் ஒதுக்கி ஒதுக்கி
அகம் செதுக்கினாய்-சிலர்
முகம் கூட பாராமல்
உன்னை சுருக்கினாய்!
நத்தை போல ஓட்டுக்குள்ளே நீ ஒடுங்கினாய்-உன்
குற்றத்தை ஒப்புக்கொள்ள நீ தயங்கினாய்....
குறைகளை உணர்ந்துகொள்ளும் புத்தியில்லையா-அதை
நிறைவாக்கி திருத்திக் கொள்ள சத்தியில்லையா?
பிழையே செய்யாத பெண்னென்று -உன்
மேலே உனக்கொரு இறுமாப்புண்டு......

உன் தேவையெல்லாம் அறிவதற்கு
கடவுள் இல்லையே?
உனக்கு மனமிரங்கி சேவை செய்யும்
தாயை விட வேறு கதியில்லையே......

அந்த தாயை நீயும் நோக வைத்தால் வழி பிறக்குமா?
எந்த ஜென்மத்திலும் தீர்க்கவிய்லாத பழி வேண்டுமா?

கடலில் போட்ட பொருளெல்லாம் கரை வந்து சேரும்
கால்யாணத்தில் போட்ட உனது வாழ்க்கை சிக்கல் எப்பத்தான் தீரும்?

நெஞ்சில் உள்ள வார்த்தையெல்லாம் கொட்டிவிட்டேன்
இது உன் மனதை மாற்ற வேண்டுமென்று நானும் வேண்டிக்கொண்டேன்...