Pages

Wednesday, August 25, 2010

ஆனந்தம்.....பேரானந்தம்

சொல்லி சொல்லி
பார்க்கிறேன்
சொல்லில் தெளிவைக்
கேட்கிறேன்
தள்ளி தள்ளி
வருகிறேன்....
தவறுகள் கண்டால்
துடிக்கிறேன்

துவண்டு துவழ்ந்து
போகிறேன்
துன்பம் கண்டால்
அழுகிறேன்
துணிந்து எழுந்து
நிற்கிறேன்
துணையாய் உன்னை
அழைக்கிறேன்.......

துண்டு துண்டாய்
உடைந்தாலும்
சுக்கு நூறாய்
கிழிந்தாலும்
தீயில் கருகி
தீய்ந்தாலும்
உன் அன்பை மட்டும்
துதிக்கிறேன்........

ஒளியாய் உன்னை
கண்டதுண்டு
ஒளிரும் நிலவாய்
ரசித்ததுண்டு
துளிரும் மலராய்
தரிசித்ததுண்டு
குளிரும் பொழுதில்
குளிர்ந்ததுண்டு
வெப்பம் தணிக்கும்
தென்றலுண்டு
வெந்து தணியும்
தருணமுண்டு
எல்லாம் உந்தன்
செயல்கள் என்று
மனதில் உன்னை
தொழுததுண்டு.
அன்பே இறையே
ஆனந்தமே
அருள்வாய் நலமே
பேரின்பமே
உன்பால் தொழுகின்ற
இதயங்களில்
அன்பால் நிறைந்திடு
(இ) எப்பொழுதும்.

No comments:

Post a Comment