Pages

Thursday, August 26, 2010

நடிக்கத் தெரியாமல்

நடிககத் தெரியாமல்

படித்துப் பார்க்கிறேன் - மீண்டும்

மீண்டும் சில இதயங்களை

படித்துப் பார்க்கிறேன்....



விடைகள் இல்லாமல்

வெறும் வினாக்களோடுதான்

வாழ்க்கையை

வாழ்ந்து கொள்கிறேன்- பல பொழுதுகளில்

வீழ்ந்து போகிறேன்.....



விழுந்த வேகத்தில்

எழுந்து நிற்காமல்

உடைந்து போகிறேன்

இதயம் இரும்பாய்

ஆகும் வரைக்கும்

உறைந்து போகிறேன்........



தெளிவேயற்ற பயணங்கள்

முடிவேயற்ற சோதனைகள்

முகமூடியோடு மனிதர்கள்

மூச்சு முட்டி போகிறது

முடியாமல் விடியாமல்

பயணம் நாளும் தொடர்கிறது....

No comments:

Post a Comment