கடந்த கால பதிவுகளைத்
திருப்பிப் பார்க்கிறேன்...
நம் புகைபடங்கள்.................
ஒவ்வொன்றும் ஒரு கதை கூறியது..
நம் அறிவுக்குத் தெளிவூட்டிய கல்லூரி
நம் தெளிவுக்குள் ஒளியேற்றிய விரிவுரைஞ்ர்கள்...
நம் அனுபவங்களைப் புடம் போட்ட நண்பர்கள்
நம் அதிர்வுகளைப் பதிவு செய்த மெளனங்கள்
எல்லாம் வியப்பைத் தந்தன
சொல்லால் சொல்லவியலாத களிப்பைத் தந்தன..
ஏதோ தேடி வந்தோம்
எதையோ கண்டும் கொண்டோம்
இதுதான் அது
அதுதான் இது
என்ற நிர்ணயிதிற்குள்
எதுவுமேயில்லாமல் விலகி வந்தோம்
அந்த பிணக்குகள் தந்த
பிளவுக்குள் பிரிவுகள்
நமக்கு நம்மை அடையாளம் காட்டியதாய்
உறவுகளை நமக்கு காட்டிக் கொடுத்ததாய்
அர்த்தமேயில்லாத அனுமானங்கள்.....
நமக்கு வாய்த்த நட்பும் உறவும்
நம்மை மட்டும் ஏய்ததாய்
ஏனோ நமக்குள் நமைச்சல்கள்....
அடங்காத மனத்துக்குள்
ஆயிரம் அனுதாபம்.......
வளராத அறிவுக்குள்
வாய்க்காத தெளிவுகள்....
கூடி கூடி சமைத்து உண்டோம்
கூடும் போது கதைத்தே கொன்றோம்
விரிவுரை நேரம் தூங்கி வலிந்தோம்
சோதனை வந்தால் துணிந்து வென்றோம்...
மீண்டும் அந்த சத்தம்
மீண்டும் அந்த சண்டை
மீண்டும் அந்த நட்பு
மீண்டும் அந்த படிப்பு
மீண்டும் அந்த துடிப்பு
மீண்டும் அந்த கசப்பு
மீண்டும் அந்த வெறுப்பு
மீண்டும் அந்த பிளவு
மீண்டும் அந்த பிணக்கு
மீண்டும் அந்த பிரிவு
மீண்டும் அந்த அழுகை
மீண்டும் அந்த மன்னிப்பு
மீண்டும் அந்த நினைவு என்று
நீண்டு போகும் இந்த மீண்டும்
காலம் மீண்டு வாராதா?
சிரிப்பொலியும்
சிந்திய கண்ணீரும்
கொண்ட கோபமும்
திட்டிய வார்த்தையும் - வாங்கி
கட்டிய திட்டுகளும்
அடைந்த வெற்றியும்
குடைந்த தோல்வியும்
வெற்றி காதலையும்
வெற்றுக் காதலையும்
பற்றிச் சிந்திக்கிறேன்
தொற்றிக் கொள்ளு(ல்லு)ம்
அந்த தருணங்களை
வெற்றிக் கொள்ள
வழித் தெரியாமல்
பயணிக்கிறேன்....
மீண்டுமொருநாள்
புகைபடங்களோடு நான்
பனிமூட்டமாய்
கல்லூரி சாலை.........
No comments:
Post a Comment