த(ட)மிழ் பேசும்
த(ட)மிழர்களே.....
தமிழினி மெல்ல
மெல்லச் சாகுமென்று
தயங்காமல் சொல்பவர்களே....
தமிழ்ப் பள்ளியில்
பணியாற்றிக்கொண்டு
தமிழல்லாத பள்ளிக்கு
பிள்ளைகளை அனுப்பும்
தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களே!
தமிழுக்காகவே பணியாற்றுகிறேன்
என்று தமிழை முதுகில் சுமந்து
திரிவதாய் நடிக்கும் கூட்டமே.........
தமிழ் எந்தன் மூச்சு
தமிழ் பள்ளி என் பேச்சு என
தம்பட்டம் அடித்துக்கொண்டு
தப்பாட்டம் புரியும்
தமிழர்களே. தமிழச்சிகளே......
சற்றே நில்லுங்கள்...........
மொழியினத்தின் உயிரென
மூச்சுக்கு முந்நூறு முறை
மூச்சு விடாமல்
மொழிவோம்....
அது நலிவுருவதைக்
கண்டும் காணாமல்
வாளாவிருப்போம்......
தரமில்லை தமிழ்ப்பள்ளியென
தாழ்த்தியே வைத்தோம் - அதன்
தரமுயர நாம் என்ன செய்தோம்
இதை எப்போதான்
நாம் எண்ணி பார்ப்போம்?
பொருளில்லை
வலுவில்லை
ஆதாரமில்லையம்மா....
ஆதரிப்பாரும்
இல்லையெனில்
நாம் எங்கு
செல்வதம்மா?
வீழ்வது தவறல்லா
ஒருபோது
வீழ்ந்தே இருப்பது தவறு
எப்போதும்
வீறு கொண்டெழுவது
எக்காலம்......
பெற்றத் தாயை
விற்று விடுவதில்லையே!
கற்ற தமிழை மட்டும்
போற்றுவாரில்லையே!!!
தமிழ் மொழியே
வேண்டாமென்று
விட்டு விட
உயிரா அது?
வெட்டி வீசி விட
மயிரா அது?
விரட்டி விட
உறவா அது?
இதற்கெல்லாம் மேலேயென
இன மான ரோஷமுள்ள
தமிழனுக்குத் தெரியாம போச்சே........
No comments:
Post a Comment