Pages

Saturday, April 23, 2011

எதிர்பார்புகள்

கடந்த வாரத்தில் மட்டும் இடைநிலை பள்ளி மாணவர்கள் மூவர் தற்கொலை புரிந்து கொண்டனர். இது மனதை வருத்துவதோடு பலரையும் உலுக்கிய செய்தியுமாகும். உண்மை என்ன ? ஒரு மாணவி , இரு மாணவர்கள். எனக்கு கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு யார் மீதும் குற்றம் சுமந்தவும் நான் விரும்பவில்லை. மாணவன், சம்பந்தப்பட்ட விஷயத்தில் இரு தரப்பினருக்கும் இது இழப்பு தான். ஒரு சாதாரண விஷயத்திற்காக பூச்சி கொல்லி அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டதில் உள்ள வைராக்கியம் கல்வியில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதில் காட்டியிருக்கலாமே என்ற ஆதங்கம் தான்......

நம்முடைய கோபம், வெறி, பலி வாங்கும் உணர்ச்சி இவற்றை எதிர்மமான வழிகளில் பயன்படுத்தாமல் அவற்றை (Positive energy)யாக மாற்றியிருக்கலாமே
சின்னஞ் சிறுசுகளின் மிக சின்ன இதயத்தில் negative-வாக வளர்ந்த வைராக்கியம்
அவர்களையே பலிகடாவாக்கி விட்டது..........
ஆனால் இழப்புகளின் வலி மட்டும் நிரந்தரம்...............

தோள்களில் பையையும்
விழிகளில் கனவையும்
உள்ளத்தில் உண்மையையும் சுமந்து வரும்
கண்மணியே உன்னோடுதான்
உன் மனதோடு தான்
பேசுகிறேன்....

நம்பிக்கையில் உன்னை
பார்க்கிறேன் - தினம்
சந்திக்கையில் ஏதேதோ
ஒப்பிக்கவே
யோசிக்கிறேன்..
உன் அறிவு கண்ணை
திறந்து வைக்கவே
என் இதய வாசல்
என்றென்றும் விழைகிறது.....

என் முயற்சிகளை
முறியடிக்கும் உன் சோம்பல் தனம்
என் உழைப்பை மதியாத
உன் உதாசீனம்...
உன் மீதான என் அன்பை
ஆழம் பார்க்கும் உனதுறவுகள்

அனைத்துக்கும் நான்
நாணலாய் வளைந்து தான்
கொடுக்கிறேன்
பல நேரம் இத்தொழிலுக்கு
ஏன் வந்தோமென
வெந்தணலாய் வெந்து தான்
போகின்றேன்....

உன்னை அடித்து விட்டு
திட்டி விட்டு வந்த
இரவுகளில் இரக்கமின்றி
என் உறக்கத்தை
தொலைத்திருக்கிறேன்..
வீட்டில் இருக்கும் போது கூட
விட்டு வந்த பாடம் தான்
என் நினைவில்
திட்டமிட்டு திட்டமிட்டு
நான் போட்ட பாடமெல்லாம்
வீட்டில் செய்யாமல் விட்டு வந்து
பொய்யுரைக்கும் போது
மெய் கொதிக்குமெனக்கு
கை நீளூம் அதற்கு......

மாதா, பிதா, குரு தெய்வம் என்றார்கள்
அந்த வரிசையில்
மதிப்பிழந்து மானமிழந்து
இருப்பதென்னவோ
குரு எனும் போர்வைக்குள்
திரு பிடித்துப் போன நான் தான்.....

பொன்மணியே...
என் பணியே உன்னை உயர்த்திடுவதுதான்
ஏன் என் அக்கறையும்
உன் பால் நான் கொண்ட
அன்பையும் மட்டும்
தவறாகவே புரிந்து வைத்திருக்கிறாய்?

என் அக்கறைக்கு
ஆத்திரமே வரக்கூடாது
என்றுதான் உத்தர விடுகிறேன்
ஆனால் பாழாய் போன இந்த
ஆத்திரம் பாசம் கொண்ட உன் மேல்
தான் வருகிறது.........

ஏசினாலும் பேசினாலும்- பல
பொழுதுகள் பேசாமல் நீ போனாலும்
நேசித்தாலும் விசுவாசித்தாலும்- பல
பொழுதுகள் நீசரென நீ விலகினாலும்
பாசத்தோடே போதிப்பேன்
உன் முயற்சிக்கு நான்
தோள்கொடுப்பேன்.......

No comments:

Post a Comment