கொடுக்கப்பட்ட நேரம்
குன்றி குறுக....
தொடுக்கப்பட்ட கேள்விகள்
நீண்டு வளர.....
கேள்விகள் புரியாமல்...
விடைகள் தெரியாமல்
விழிகள் பிதுங்க...
ஞாபகச் சக்தியைச்
சபித்தப்படி
நகர்கின்ற காலத்தை
நுகர்கின்ற கோலம்
கொடுமையடி.....
இன்னும் கொஞ்சம்
படித்திருந்தால்
இந்தக் கேள்வி
முடிந்திருக்கும்
என்று எண்ணி
நொந்தப்படி
மென்று தின்றேன்
கேள்விகளை...........
ஆழமாய் சிந்திப்பதுபோல்
அழகாய் நடித்துக்கொண்டு
நீளமாய் பார்வை ஓட விட்டேன்
தூரமாய் இருந்த நண்பன்
ஏக்கமாய் என்னை பார்த்திருந்தான்
ஏளனமாய் கொஞ்சம் நகைத்து வைத்தான்....
மூளையைக் கழற்றி
சலவைச் செய்ய
முயன்று தோற்றேன்...
படித்தவையோ கொஞ்சம் - அது
படிக்காததை மிஞ்சும்....
கேள்வியைப் பார்த்து பார்த்து
அஞ்சும் நெஞ்சம்
கடவுளையும் கொஞ்சம் கெஞ்சும்......
படியாமல் இருந்ததன்
விளைவு
பரீட்சையில் தந்தது
நோவு
படித்துப் படித்துச் சொன்னார்கள்
பரீட்சைக்குப் படியென்று கொன்றார்கள்
சொன்னவரெல்லாம் வென்றவர்தானா
என்று இறுமாப்புடனே நானிருந்தேன்
இன்று இயலாமையினால் நான் வீழ்ந்தேன்......

No comments:
Post a Comment