சொல்லடி தோழி
என்னடி கோபம்?
ஏனடி என்னை வதைக்கிறாய்?
உன் கோபச் சொல்லால் எரிக்கிறாய்?
தவறேதும் நான்
செய்ததாக
நினைவில்லையே
தவறியும் உன்னை
புண்படுத்த
நினைக்கவில்லையே!
இழப்புகளின்
நகலாய் நீ....
இருத்தலில்
இனிதாய் யார்?
என் மண்டைக்குள்
குடையும் ஒரு கோடி
கேள்விகளில்
ஒரு பாதி
உன்னது
மறுப்பாயா நீ?
சபையில் யாரேனும்
உன் சங்கதி
பேசினாலும் அதற்காக
அடிக்கடி பதிலடி
கொடுத்தவள் நானடி.
உன் பக்கம்
தப்பென்றிருந்தாலும்
தவறாமல் சரியென்று
சொல்பவள் நானடி.....
உன் பக்கம்
பிழையேயானாலும்
இல்லையென மறுத்தவள்
நான்.....
கொஞ்சம் காலமாக
நஞ்சாக இருக்கிறாய்....
அஞ்சாமல் என்னை
பஞ்சாக எரிக்கிறாய்...
என் பிழையை மட்டும்
பொறுக்கக் கூடாதா?
உன் ஞாயத்தராசில்
நிறுத்தலாகாதா?
செய்வதைச் செய்து விட்டு
செய்வதறியாமல்
தவிக்கிறாய்....
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலையும் ஆட்டுகிறாய்.....
இதற்கெல்லாம் கோபமா?
நட்பில் இதுவெல்லாம் சகஜமா?
உரிமை உள்ளதால்
உடைகிறேன் என்கிறாய்...
குற்றம் உள்ளதால்
குத்திக் காட்டுகிறேன் என்கிறாய்........
உன் ஞாயம் நீதியெல்லாம்
உன்னோடு நான் கொண்ட
நட்பின் மீதுதானா?
உன் கோபம் தாபமெல்லாம்
என்னை
தோற்கடிப்பதில்தானா?
பலநாளும் தோற்றவள் நானே...- அதை
ஒருநாளும் அறியாதவள் நீ தானே.....
நட்பில் ஞாயம்
பார்க்கும் ஞானப்பெண்ணே.......
நீ குத்திக் கிழித்தது
என் இதயம்....
அதில் குருதி
வலிகிறது
நீண்ட நெடுநாளாய்....
நாடிய நட்பு
காக்கிறது மெளனமாய்..........
என்னடி கோபம்?
ஏனடி என்னை வதைக்கிறாய்?
உன் கோபச் சொல்லால் எரிக்கிறாய்?
தவறேதும் நான்
செய்ததாக
நினைவில்லையே
தவறியும் உன்னை
புண்படுத்த
நினைக்கவில்லையே!
இழப்புகளின்
நகலாய் நீ....
இருத்தலில்
இனிதாய் யார்?
என் மண்டைக்குள்
குடையும் ஒரு கோடி
கேள்விகளில்
ஒரு பாதி
உன்னது
மறுப்பாயா நீ?
சபையில் யாரேனும்
உன் சங்கதி
பேசினாலும் அதற்காக
அடிக்கடி பதிலடி
கொடுத்தவள் நானடி.
உன் பக்கம்
தப்பென்றிருந்தாலும்
தவறாமல் சரியென்று
சொல்பவள் நானடி.....
உன் பக்கம்
பிழையேயானாலும்
இல்லையென மறுத்தவள்
நான்.....
கொஞ்சம் காலமாக
நஞ்சாக இருக்கிறாய்....
அஞ்சாமல் என்னை
பஞ்சாக எரிக்கிறாய்...
என் பிழையை மட்டும்
பொறுக்கக் கூடாதா?
உன் ஞாயத்தராசில்
நிறுத்தலாகாதா?
செய்வதைச் செய்து விட்டு
செய்வதறியாமல்
தவிக்கிறாய்....
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலையும் ஆட்டுகிறாய்.....
இதற்கெல்லாம் கோபமா?
நட்பில் இதுவெல்லாம் சகஜமா?
உரிமை உள்ளதால்
உடைகிறேன் என்கிறாய்...
குற்றம் உள்ளதால்
குத்திக் காட்டுகிறேன் என்கிறாய்........
உன் ஞாயம் நீதியெல்லாம்
உன்னோடு நான் கொண்ட
நட்பின் மீதுதானா?
உன் கோபம் தாபமெல்லாம்
என்னை
தோற்கடிப்பதில்தானா?
பலநாளும் தோற்றவள் நானே...- அதை
ஒருநாளும் அறியாதவள் நீ தானே.....
நட்பில் ஞாயம்
பார்க்கும் ஞானப்பெண்ணே.......
நீ குத்திக் கிழித்தது
என் இதயம்....
அதில் குருதி
வலிகிறது
நீண்ட நெடுநாளாய்....
நாடிய நட்பு
காக்கிறது மெளனமாய்..........

No comments:
Post a Comment