Pages

Monday, April 15, 2013

ஏன்? ஏன்? ஏன்?

காரணம் இல்லாமல்
கண்ணீர் வருகிறது
மரணம் நிகழாமல்
மயானம் தெரிகிறது...

தோளே இல்லாமல்- மனம்
சாய்ந்து அழுகிறது
துடுப்பே இல்லாமல் -கலம்
தானாய் போகிறது...

விளக்கு ஒளிர்ந்தாலும்
இலக்கு தெரியவில்லை
வெளிச்சம் தெரிந்தாலும்
விளக்கம் கிடைக்கவில்லை
கிழக்கு வெளுத்தாலும்
வழக்கு தீரவில்லை...

நினைக்க மனமுண்டு
வெறுக்க வழியில்லை
பிணைக்க கரமுண்டு
இணைய உறவில்லை....

விதியைச் சபித்து விட்டு
விலகி நிற்கின்றேன்..
மதியைக் கொன்று விட்டு
வலியால் நிறைகின்றேன்.....

எதையோ தொலைத்து விட்டேன்?
அதை எங்கோ வைத்து விட்டேன்?

எதை நான் தேடிகிறேன்
அதை எங்கே தேடிடுவேன்.....

காரணம் இல்லாமல் கண்ணீர் வருகிறது.....

No comments:

Post a Comment