வயிறெரிந்துதான்
வாழ்த்தினேன்
எரிக்கட்டும் உன்னையும்
சேர்த்துதான்
இலக்கியத்தில்
வரும் இலக்கணம்
அல்ல நான்
வழக்கத்தில் வாழும்
பிழைகளும் தான்
சிலுவையில்
நிற்கும் இயேசுவல்ல நான்
உன் பாவங்களை
மன்னித்து மறப்பதற்கு....
நான் என்ன
செய்வேன் ?
நாள் செய்யும் தன்னால்-அந்த
நாள் வரும் பின்னால்........
தினம் ஒரு
துணை தேடும்
உன் இரவுகள்
பிணம் தின்னும்
கழுகு போல்
உன் உறவுகள்
பணம் மட்டுமே
உன் நினைவுகள்....
காலுக்குச் சேராத
செருப்பு நீ
கழற்றி வீசுகிறேன்
வெறுப்பில் நான்......
நல்லவர் போல்
கள்வனுமுண்டு
கண்டு கொண்டேன்
உன் முகதிரை இன்று
வாழ்த்துச் சொன்ன
போது
வாயடைத்துப் போனாய்
வசைபாடுகின்றேன்
வாயை
மூடிச்செல்.......
சீ .... வாழ்ந்து தொலை......

No comments:
Post a Comment