மெளனமாயிருந்தாலும்
யெளவனமாய் இருந்தது வானம்...
மரணித்துக் கொண்டிருந்த
அந்தி பொழுதை
வழியனுப்பி விட்டு
உயிர்பித்துக் கொண்டிருந்தது
இரவு தாயையும்
நிலவு மகளையும்.....
வதனமற்ற பெண்ணாய்
வந்து சன்னமாய் பேசி போகும்
சலனமற்ற காற்று.....
ரசிக்க ரசிக்க ரம்மியமாய்
ஓர் இரவு
பார்க்க பார்க்க சகியாத
பெளர்ணமி நிலவு.....
தூரத்தில் நீ
துயரத்தில் நான்..
யெளவனமாய் இருந்தது வானம்...
மரணித்துக் கொண்டிருந்த
அந்தி பொழுதை
வழியனுப்பி விட்டு
உயிர்பித்துக் கொண்டிருந்தது
இரவு தாயையும்
நிலவு மகளையும்.....
வதனமற்ற பெண்ணாய்
வந்து சன்னமாய் பேசி போகும்
சலனமற்ற காற்று.....
ரசிக்க ரசிக்க ரம்மியமாய்
ஓர் இரவு
பார்க்க பார்க்க சகியாத
பெளர்ணமி நிலவு.....
தூரத்தில் நீ
துயரத்தில் நான்..
No comments:
Post a Comment