Pages

Monday, April 15, 2013


கடலலை மேவும்
கடற்கரை ஓரம்
காதோடு பேசும்
காற்றோடு நானும்.......

இருட்டு விலகாத
இளங்காலை பொழுது
இதமாக வீசும்
இளவேனிற் காற்றும்.....

பார்க்கச் சகியாத
பொன் மாலை பொழுது
பறந்து மறைகின்ற
பறவையாய் நானும்

பனியை அணிந்த
புல்நுனி யாவும்
பார்த்துச் சுகிக்க
பல நாள் வேண்டும்....

இலையோடிருந்தால் ஓர் அழகு காட்டும்
இலையுதிர்ந்தாலும் பேரழகு காட்டும்
சாலையோரத்து தேவதை அவள்
சோலை தோறும் காவலும் அவள்.......

No comments:

Post a Comment