Pages

Monday, April 15, 2013

அழகான ராட்சசி.......

ஆயிரம் கிளைகள் நீட்டி
நிழல் தரும் மரமே போற்றி........

அன்னையாய் தந்தையாய்-உன்னை
வணங்கினேன் அருள்வாய் போற்றி....

மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம்
நலங்கள் கோடி தந்தாய் போற்றி...

பூவாய் பூத்து
காயாய் கனிந்து
தித்திப்பாய் தினம்
தருகின்ற தருவே போற்றி...

காற்றோ புயலோ
அசைக்கும் பொழுதும்
அசைந்தே ஆடி
இசைவாய் நிற்பாய் போற்றி...

பச்சை தேவதையே
பிச்சை கேட்கின்றோம்
மிச்சம் உள்ள காற்றை
நித்தம் செய்வாய் சுத்தம் போற்றி

எத்தனை கவிகள்
பித்தமாய் ஆக
வித்தாய் ஆனாய்
புவியின் சொத்தே போற்றி...

பொழுதொரு நிறம் காட்டி
பொழுதெல்லாம் தலையாட்டி
பல வருடம் கடந்தாலும்
பொழிவிழக்காத பொழிவே போற்றி போற்றி...

போற்றி இன்னும் உன்னை பாட
வார்த்தையின்றி தவிக்கின்றேன்
காற்றில் ஆடும் பொழுதெல்லாம்
கட்டி அணைக்க நினைக்கின்றேன்....

No comments:

Post a Comment