Pages

Monday, April 15, 2013

பாதைகள் மாறியே.....


நேற்று வரை
நான் இருந்தேன்
நலமாக

உன்னை கண்ட
பின்னால்
நானானேன் நோயாக..

தனிமை தேடி
அமர்கின்றேன்
ஓர் ஓரமாக

நயனமிரண்டும்
நனைகிறது
ஈரமாக

பயணம் போக
மறுகிறது
என் கால்கள்

பாதை மாறி
போக தவிக்கிறது
என் கண்கள்.....

வலிகள் தந்து
விடைபெற்றாய்
நீயாக.....

திசை எங்கே
தேடுகிறேன்
நெடுநாளாக........

No comments:

Post a Comment