காற்று வீசும் சாலையில்
கைகோர்த்து நடக்கலாம்.......
மலர்கள் மலர்ந்த சோலையில்
மனம் விட்டு பேசலாம்...
அந்தி சாயும் நேரத்தில்
தோளில் சாய்ந்து கொள்ளலாம்...
பெளர்ணமி இரவிலே
பக்கம் பக்கம் அமர்ந்து
மெளனமாக இருக்கலாம்...
அலைவீசும் கடலோரம்...
கைவீசி நடக்கலாம்.....
மழை பெய்யும் மாலையில்
ஒரே குடையில் ஒதுங்கலாம்...
வயல்வெளி தோறும்
கயல் பிடித்துப் பார்க்கலாம்....
அறுந்து விழும் அருவியிலே
ஆடை நழுவ குளிக்கலாம்....
அமைதியான நதியோரம்
இனிமையாகப் பாடலாம்.....
எங்கேனும் மலையடிவாரம் தேடி- ஒரு
திங்கள் வாழாலாம்...
ஆளே நுழையாது வனம் தேடி
மிச்ச வாழ்வை முடிக்கலாம்........
நீ என்னோடு வருவதென்றால்
இதுவெல்லாம் நடக்கலாம்.....
கைகோர்த்து நடக்கலாம்.......
மலர்கள் மலர்ந்த சோலையில்
மனம் விட்டு பேசலாம்...
அந்தி சாயும் நேரத்தில்
தோளில் சாய்ந்து கொள்ளலாம்...
பெளர்ணமி இரவிலே
பக்கம் பக்கம் அமர்ந்து
மெளனமாக இருக்கலாம்...
அலைவீசும் கடலோரம்...
கைவீசி நடக்கலாம்.....
மழை பெய்யும் மாலையில்
ஒரே குடையில் ஒதுங்கலாம்...
வயல்வெளி தோறும்
கயல் பிடித்துப் பார்க்கலாம்....
அறுந்து விழும் அருவியிலே
ஆடை நழுவ குளிக்கலாம்....
அமைதியான நதியோரம்
இனிமையாகப் பாடலாம்.....
எங்கேனும் மலையடிவாரம் தேடி- ஒரு
திங்கள் வாழாலாம்...
ஆளே நுழையாது வனம் தேடி
மிச்ச வாழ்வை முடிக்கலாம்........
நீ என்னோடு வருவதென்றால்
இதுவெல்லாம் நடக்கலாம்.....
No comments:
Post a Comment