Pages

Monday, April 15, 2013

கல்யாணமாமே உனக்கு....

கல்யாணமாமே உனக்கு
காற்றோடு செய்தி வந்தது எனக்கு........

பாழாய் போன மனதை- இரு
கூறாய் பிளக்கிறது
சில நினைவு....
வேரோடு சாய்கின்ற
மரமாய்
வீழ்கிறது உறவு....
உலகம் உற்ற
தோல்வியெல்லாம்
தோளோடு.....
உள்ளம் ஏற்று அழுகிறது
வலியோடு....
சொல்லும் வார்த்தைக்கும்
தெரியாது
கொல்லும் இந்த வலி....

என்னை யாரும் காணாமல்
நானும் யாரையும் பாராமல்
தன்னந்தனியே போகின்றேன்
கண்ணீரில் கரைந்து வீழ்கின்றேன்.....

பணியோடு பணியாய்
பிணைத்துக் கொள்கிறேன்
பின்னோடு வந்து
பிணியாகிறது
உன்னோடு ஞாபகங்கள்......

காரணமே இல்லாமல்
மரண தண்டனை
ஏற்கிறேன்
காதல் கொண்டதால் - அது
தோற்கடித்ததால்....


பத்தோடு பதினொன்றாய்
அத்தோடு இதுவொன்றாய்
உனக்குள் நான்
எத்தோடும் எதனோடும்
ஒவ்வாத ஒன்றாய்
சொத்தாக சத்தாக
எனக்குள் நீ.....

கலங்க வைத்தாய்
காயம் செய்தாய்
காரணம் கூறினாய்
கடைசியாய் கழுத்தையும் அறுத்தாய்........

வாழ்த்த தான் செய்கிறது
இப்போதும் மனது.........
வாழ்ந்து விட்டு போ...

No comments:

Post a Comment